Thursday, 16 December 2010

தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் வழிமுறைகள்

1. எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன் வரிசைக்கு வாருங்கள்.

2. யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்கள் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.

அவர் எப்பேர்ப்பட்ட பிரபலமாக இருந்தாலும், தலை கவிழ்ந்து தரையில் விரலால் கோலம் போடுவதெல்லாம் வேண்டாம்.

3. நீங்கள் நடக்கிற வேகத்தை அதிகப்படுத்துங்கள்.

நடையில் தெரியும் அந்த சுறுசுறுப்பு, உற்சாகம் உங்கள் செயல் வேகத்தையும் தானாக அதிகரிக்கும்.

4. எந்த கூட்டத்திலும் அடுத்தவர்கள் பேசட்டும் என்று காத்திருக்காதீர்கள். அங்கே கேட்கிற முதல் குரல் உங்களுடையதாகட்டும்.

5. எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள். அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது.

Saturday, 27 November 2010

உங்கள் முதல் அடி எப்போது?

ஒரு நிலம் எவ்வளவுதான் வளமானதாக இருந் தாலும், அதில் உழவு மேற்கொள்ளாவிட்டால் எதற் கும் பயன் அளிக்காது. அது போலவேதான் மேலும் மேலும் கற்றுக்கொள்ள ஆர்வம் இல்லாத மனித மூளையும் துருப்பிடித்துப் போகும். கற்பதற்கு மட்டும் எந்தக் காலத்திலும் தடை போடாதீர்கள்!
 பின் வரும் வார்த்தைகளை அடிக்கடி உபயோ கிக்கப் பழகுங்கள்... 'என்ன?’, 'ஏன்?’, 'எங்கே?’, 'எப்போது?’, 'எப்படி?’, 'யார்?’.
 உங்கள் ஈகோ உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முடிவு களை அது மிக மோசமாகப் பாதிக்காதவாறு அடிக்கடி சுய பரிசோதனையில் ஈடுபடுவது அவசியம்!
 ஒரு நிர்வாகத்தில் நடுவாந்திர நிலையில் இருக் கும் மேலாளருக்கு, அங்கு உயர்ந்த நிலையில் இருக் கும் எக்ஸிகியூட்டிவ் பெறுவதில் பாதி சம்பளம்தான் கிடைக்கும். ஆனால், ஏறக்குறைய அந்த எக்ஸிகியூட் டிவ்வுக்கு நிகரான வேலைப் பளுவினை அந்த மேலா ளர் சுமப்பார். அப்போதும் உங்கள் திறனை 10   சதவிகிதம் அதிகரித்துக்கொண்டால், உங்கள் சம்பளம் மிக விரைவில் இரட்டிப்பாகும்!
 எல்லா சாதனையாளர்களுக்கும் உங்களுக்குமான ஒற்றுமை... உங்கள் அனைவருக்கும் சரிசமமாக தினமும் 24 மணி நேரம் கையில் இருப்பதுதான்! அந்த நேரத்தை எவ்வளவு திறமையாக நீங்கள் கையாள்கிறீர்கள் என்பதில்தான் அடங்கி இருக்கிறது, உங்கள் வளர்ச்சியின் பிரமாண்டம். இதில் அலுவல் நேரத்துக்குப் பிறகான நேரத்தைத் திட்டமிடுவதும் அடங்கும்!
 எட்டப்படும் வரை குறிக்கோள்கள் என்பவை வெறுமனே நம்பிக்கைகள்தான். உங்கள் குறிக்கோள்கள் திட்டமிட்டதாக, எட்டக்கூடியதாக, வளர்ச்சியைக் கணக்கிடக்கூடியதாக, நிர்ணயித்த காலக் கெடுவுக்குள் அடைவதற்கான செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்!
 100 சதவிகிதம் கச்சிதமான மனிதன் இன்னும் பிறக்கவில்லை. அதனால், பிறர் செய்யும் தவறுகளை மன்னிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால், அந்தத் தவறில் இருந்து அவர்கள் அறிய வேண்டிய பாடத்தை அவர்களுக்கு உணர்த்த மறக்காதீர்கள்!
ஒன்று கவனித்து இருக்கிறீர்களா? ஏதேனும் ஒரு விஷயத்தில் முடிவெடுக்கத் தாமதித்துத் தள்ளிப்போடும்போது, அது மேலும் மேலும் சிக்கலாகும். எந்த விஷயத்திலும் முடிவு எடுக்கத் தயங்காதீர்கள்!
இந்த உலகத்தில் எதுவுமே... எதுவுமே உங்கள் கைக்கு எட்டக்கூடியதுதான். நீங்கள் விரும்புபவற்றை உங்களை நோக்கி ஈர்க்கக்கூடிய காந்தத் திறனை மட்டும் வளர்த்துக்கொள்ள வேண்டும். கடின உழைப் பும், தணியாத ஆர்வமும்தான் அந்த காந்தத் திறனை அதிகரிக்கும்!

ஒரு நிலம் எவ்வளவுதான் வளமானதாக இருந் தாலும், அதில் உழவு மேற்கொள்ளாவிட்டால் எதற் கும் பயன் அளிக்காது. அது போலவேதான் மேலும் மேலும் கற்றுக்கொள்ள ஆர்வம் இல்லாத மனித மூளையும் துருப்பிடித்துப் போகும். கற்பதற்கு மட்டும் எந்தக் காலத்திலும் தடை போடாதீர்கள்!
ஒரு நிலம் எவ்வளவுதான் வளமானதாக இருந் தாலும், அதில் உழவு மேற்கொள்ளாவிட்டால் எதற் கும் பயன் அளிக்காது. அது போலவேதான் மேலும் மேலும் கற்றுக்கொள்ள ஆர்வம் இல்லாத மனித மூளையும் துருப்பிடித்துப் போகும். கற்பதற்கு மட்டும் எந்தக் காலத்திலும் தடை போடாதீர்கள்!
எதையும் கற்றுக்கொள்ளும் மாணவ மனப்பான்மை யுடனேயே இருங்கள். நிச்சயமாக உங்களுக்குப் பல சங்கதிகள் தெரியாது. அதை மற்றவர்களிடம் இருந்து தான் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!
அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்வதைக் காட்டிலும் வலி மிகுந்தது, அந்த அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளாமல் இருப்பதுதான்!
அலுவல் திட்டமிடல்களோ, குடும்ப நல முடிவு களோ எதுவுமே ஒரு பயணம்போலத்தான். அதற்கு ஒரு மேப் அவசியம். செல்ல வேண்டிய திசை, செலவுக்கான பட்ஜெட், அடைய வேண்டிய இலக்கு என அனைத்தும் அத்தியாவசியம்!
உங்கள் நினைவாற்றலை அளவுக்கு அதிகமாக நம்பாதீர்கள். சின்னச் சின்ன விஷயங்களைக் குறிப்பு களாக எழுதிக்கொள்ளுங்கள். நாம் பேசியவற்றுள் பாதி வார்த்தைகளை அடுத்த 60 நிமிடங்களுக்குள் நாம் மறந்துவிடுவோம்!
நிச்சயம் உங்களால் பெரிய சாதனைகளை நிகழ்த்த முடியும், சின்னஞ்சிறு விஷயங்களில் உங்கள் நேரத்தைத் தொலைக்காமல் இருந்தால்!   
டோனால்ட் ட்ரம்ப் ஒரு முறை சொன்னார், 'எனக்கு எதையும் மிகப் பெரியதாக யோசிக்கப் பிடிக் கும். பலர் பிரமாண்ட வெற்றிக்கு அஞ்சியும், தீர்க்கமாக முடிவெடுக்கத் தயங்கியும் சின்னதாக யோசித்துக்கொண்டு இருக்கிறார்கள். அது என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது!’
 அதே சமயம், பெரிதாக யோசித்துக்கொண்டு இருந்தால் மட்டும் போதாது. நீங்கள் உலகத்தைச் சுற்றி வரத் திட்டமிட்டு இருந்தாலும், அந்த முதல் அடி உங்கள் வீட்டு வாசலைத் தாண்டுவதாகத்தான் இருக்கும்.
உங்கள் முதல் அடி எப்போது?

Friday, 1 October 2010

பாராட்டு எனும் மந்திரம்


முன்னேற்ற படிக்கட்டில் ஏற முக்கியமான ஒரு குணம் பாராட்டும் மனம். வீடோ அலுவலகமோ நீங்கள் எப்போதும் தனியாக இயங்க முடியாது. இன்னும் சிலருடன் சேர்ந்து தான் இயங்க போகிறீர்கள். வீட்டை பொறுத்த வரை நீங்கள் தான் குடும்ப தலைவர்/ தலைவி. எனவே பிறரை ஊக்குவிக்க வேண்டிய கடமை உங்களுக்கு உண்டு.


யோசித்து பாருங்கள்: உங்கள் கணவன்/ மனைவியை கடைசியாய் எப்போது எதற்காக பாராட்டினீர்கள் உடனே சொல்ல முடியுமா? இன்று பல வீடுகளில் மனைவி வேலைக்கு சென்றாலும் கூட பல வீட்டு வேலைகளை சுமக்கிறார். அவரை மனம் விட்டு பாராட்டுகிறோமா?

குழந்தைகளை கொஞ்சுகிறோமே ஒழிய, உண்மையான பாராட்டு வார்த்தைகள் அடிக்கடி சொல்கிறோமா? குழந்தைகளிடம் நாம் பேசும் ஒவ்வொரு பதினான்கு முறையில் ஒரு முறை தான் அவர்களிடம் பாராட்டாகவோ, பாசிடிவாகவோ பேசுகிறோம் என சமீபத்தில் வாசித்தேன். பிற நேரங்கள் அவர்களிடம் " இப்படி நட" " அப்படி செய்யாதே" போன்ற அதிகார வாக்கியங்கள் தான் பேசுகிறோம்.

உண்மையில் அத்தகைய வாக்கியங்கள் குறைவாகவும் பாராட்டும் வாக்கியங்கள் அதிகமாகவும் பேசுவதே அவர்களுக்கு நன்மை தரும்.
ஒருவரை பாராட்ட தன்னம்பிக்கை வேண்டும். தான் அப்படி இல்லையே, தன்னால் அப்படி செய்ய முடியலையே என மனதுள் குமைய கூடாது. நாம் பாராட்டும் போது அந்த தொனி வர கூடாது. அது கெடுதலே அதிகம் செய்யும்.

டேல் கார்நிஜி என்ற ஆங்கில எழுத்தாளர் மிக பிரசித்தம். அதிலும் அவரின் “ How to win Friends & influence people” பலரும் விரும்பி படித்த புத்தகங்களுள் ஒன்று. அதில் அவர் மனிதர்களுடன் நல்ல உறவு & நிறைய நண்பர்கள் வேண்டுபவர்கள் அவர்களை மனம் விட்டு பாராட்டுங்கள் என மறுபடி, மறுபடி சொல்கிறார்.

பசங்க - எனக்கு தமிழில் ரொம்ப பிடித்த படங்களுள் ஒன்று. அதில் வரும் ஒரு வசனம்: " ஒவ்வொரு மனுஷன் மனசும் ஒரு சின்ன பாராட்டுக்காக ஏங்கிட்டு இருக்கு" எவ்வளவு உண்மையான வரிகள்!! படத்தின் இறுதியில் கூட இறக்க இருக்கும் மாணவன் கைதட்டல் ஒலிகளால் நினைவு வந்து எழுவதாக காட்டியிருப்பார்கள். பார்க்கும் போதே நெகிழ்வில் அழ வைக்கும் காட்சி அது. இந்த படத்தின் அடி நாதமாக இருந்தது " பிறரை மனம் விட்டு பாராட்டுங்கள்" என்பதே.


கவிஞர் வைரமுத்துவை ஒரு முறை திருச்சியில் அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் நண்பர்கள் சிலர் சந்தித்தோம். அப்போது அங்கிருந்த வயதான ஒருவர் அவர் எழுத்துக்களை, சில வரிகளை குறிப்பிட்டு புகழ்ந்தார். வைரமுத்து மகிழ்ச்சியில் குழந்தை போல தோற்றமளித்தார். எத்தனை தேசிய விருதுகள் வாங்கிய மனிதர்! அவரையும் ஒருவர் உண்மையாக பாராட்டும் போது குழந்தை மாதிரி குதூகலம் அடைந்ததை நேரில் பார்த்தேன்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. Even God is pleased when praised!!

எனது அனுபவத்தில் சிறு வயது முதல் இன்றுவரை பல சூழல்களில் யார் யார் என்னை எப்படி பாராட்டினார்கள் என்பதை பெரும்பாலும் நினைவில் வைத்துள்ளேன். அவற்றை அடிக்கடி நினைத்து பார்ப்பது என் மேல் எனக்கே நம்பிக்கை தரும்.

இன்னொரு பக்கம், எனக்கு ஒரு விஷயம் பிடித்து விட்டால் நிச்சயம் பாராட்டி விடுவேன். உறவினர் வீட்டில் குடித்த தேநீர் நன்றாக இருந்தால் அதை தயார் செய்தது யார் என கேட்டு நேராக அவரிடமே சென்று பாராட்டினால் தான் நிம்மதி எனக்கு. போலவே அரங்கில் ஒருவர் பாடுகிறார்/ பேசுகிறார், அது பிடித்தது எனில் விழா முடிந்து செல்வதற்குள் அவரை தேடி சென்று பாராட்டிவிடுவேன்.

ஆனால் இப்படி பாராட்டுபவர்களை வாழ்வில் மிக குறைவாக தான் பார்க்கிறேன். பலரும் மற்றவர்களிடம் பாராட்டுகிறார்களே அன்றி குறிப்பிட்ட அந்த நபரிடமே பாராட்டுவதில்லை.

எனக்கு தெரிந்த ஒரு பெண்மணிக்கு மூன்று மருமகள்கள். ஒரு மருமகளிடம் பேசும் போது மற்ற மருமகளிடம் பார்த்த நல்ல குணங்கள், அவர் வீட்டில் இருந்த போது எப்படி உபசரித்தார் என புகழ்ந்து தள்ளுவார். ஆனால் குறிப்பிட்ட அவரிடம் இவற்றிற்காக பாராட்டியிருக்க மாட்டார். இதில் என்ன பலன்? கேட்டவர் " அப்ப உங்களுக்கு அவரை தான் பிடிக்கும் போல இருக்கு" என நினைத்து கொள்வது மட்டும் தான்!! இதற்கு பதில் அவரிடமே " உனக்கு என் மேல எவ்வளவு பிரியம்; என்னை நல்லா பார்த்துக்குறியே" என சொல்லியிருந்தால் அவரும் மகிழ்ந்திருப்பார்.

உண்மையில் தன்னை முழுதாய் அறிவது தான் கடினமான செயல். நீங்கள் பாராட்டும் நபருக்கே தன் பலம் தெரியாமல் இருக்கலாம். அந்நிலையில் அவரது பலத்தை அவருக்கே நீங்கள் உணர வைக்கிறீர்கள்!! எண்ணி பாருங்கள் எத்தனை உன்னதமான செயல் இது!!

நிறைவாக பாராட்டு - சில விதிகளை பார்ப்போமா?

1. பாராட்டு உண்மையாக இருக்க வேண்டும். செயற்கையாகவோ அடுத்து அவரிடமிருந்து வேறு உதவி எதிர் பார்த்தோ இருக்க கூடாது. உண்மையான பாராட்டிற்கும், பொய் புகழ்ச்சிக்கும் வித்தியாசம் யாராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

2. பாராட்டுவதில் தயக்கம் கூடாது. முதலாவதாக பாராட்டுபவராக இருங்கள். முதலில் வேறு யாரும் பாராட்டி விட்டாலும் நீங்களும் எப்படி உணர்ந்தீர்கள் என சொல்லி பாராட்டலாம்.

3. பாராட்டும் போது முடிந்த வரை பொதுவாக இல்லாமல் குறிப்பிட்ட எந்த விஷயம் பிடித்தது என சொல்லி பாராட்டுவது நலம்.

4. எதற்காக பாராட்டலாம்? எதற்காகவும் பாராட்டலாம். உடைக்காக, தலை அலங்காரத்திற்காக, அவரிடம் உள்ள நல்ல பழக்கத்திற்காக ..இப்படி அந்த நேரத்தை பொறுத்து உங்கள் மனதில் அவரை பற்றி நல்ல எண்ணம் வரும் போது பாராட்டலாம். கவனம்: எதிர் பாலார் opposite sex - எனில் உடை மற்றும் அழகுக்காக பாராட்டுவது சில நேரம் ரசிக்க படாமல் போகலாம்.

5. யாரை பாராட்டலாம்? யாரையும் பாராட்டலாம். உங்களுக்கு தெரிந்தவர், தெரியாதவர், அலுவலகத்தில் உங்கள் கீழ் வேலை செய்பவர் மட்டுமல்ல உங்களுக்கு இணையான நபர், உங்கள் பாஸ் என யாரையும் சரியான காரணத்துக்காக பாராட்டலாம். (சிலர் பாஸை பாராட்டுவதை " காக்கா" பிடிப்பதற்காக செய்ய கூடும். அவ்வாறு இல்லாமல், முதல் பாயிண்டில் சொன்னது போல் பாராட்டு உண்மையாக இருக்க வேண்டும். காக்கா பிடிக்க செய்யும் முயற்சிகள் பாஸுக்கு எளிதில் தெரியும்)

6. எப்படி பாராட்டலாம்? பெரும்பாலும் நேரில் பாராட்டுவது மிக சிறந்தது. அது இயலாத போது மெயில் அல்லது போனில் பாராட்டலாம். மெயில் எனில் சிலர் அந்த பாராட்டுகளை டெலிட் செய்யாமல் நினைவாக வைத்திருக்க வாய்ப்புகள் உண்டு.

வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் ஒருவர் மற்றவர் மேல் ஏதோ ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தி செல்கிறோம். அந்த தாக்கம் நல்ல விதமாக இருக்கட்டுமே.. உங்களை சுற்றி உள்ளவர்களை மனம் விட்டு பாராட்டுங்கள். அவர்களும் மகிழ்வார்கள். என்றும் அந்த வரிகளை மட்டுமல்ல, உங்களையும் சேர்த்தே நினைவில் கொள்வார்கள்.


பிறரின் வெற்றியில் நீங்களும் மகிழுங்கள


உங்களுடன் படித்த நண்பர் உங்களை விட பணியிலும் அந்தஸ்திலும் சில மடங்கு பெரியவராக உள்ளது - உங்களுக்கு நெருடலாக உள்ளதா?
அலுவலகத்தில் உங்களுக்கு இணையானவர் - ஆனால் உங்களைவிட அதிகம் உழைப்பவர் - சம்பள உயர்வு அதிகம் பெற்றால் நீங்கள் சுணங்கி போகிறீர்களா?
 உங்கள் உடன் பிறந்தவர் அல்லது உறவினர் - புது வீடு வாங்க உங்களுக்கு பெரு மூச்சு எழுகிறதா?இவற்றிற்கு நம் பதில் ஆம் எனில் அந்த ஆமை சற்று இறுக்கமாய் பிடித்திருக்கிறது என்று கொள்ள வேண்டியது தான்!

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடுவதாக சொன்னார் வள்ளலார். பொறாமை வாதிகள் சற்று வித்தியாசமானவர்கள். அவர்கள் நன்றாக வாழ்பவர்களை பார்த்தால் வாடி விடுவார்கள்.

மனித பிறப்பின் அற்புதமே ஒவ்வொரு மனிதரும் வித்யாசமான தனி தன்மை பெற்றிருப்பது தான். அடுத்தவரின் இலக்கு/ பயணம்/ துயரம் இவை நமக்கு எப்படி தெரியும்? ஒருவரை மற்றவருடன் ஒப்பிடுவது, ஒப்பிடுபவரை அவமானபடுத்துவதற்கு சமம். இப்போது சொல்லுங்கள்: உங்களை உங்கள் நண்பருடன் ஒப்பிட்டு உங்களை நீங்களே அவமான படுத்திக்கொள்ள போகிறீர்களா?

ஒவ்வொரு மனிதரும் தனித்தன்மை கொண்டவராதலால் அவரை அவருடன் தான் ஒப்பிட வேண்டும். இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா?

சென்ற ஆண்டிலிருந்து இந்த ஆண்டுக்குள் சிறிதளவாவது முன்னேறியிருக்கிறீர்களா? உங்களுக்கான இலக்கை நிர்ணயம் செய்திருந்தால் அதை நோக்கி கொஞ்சமேனும் முன்னேறியிருக்கிறீர்களா?சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு வருமானம் சற்றேனும் அதிகமானதா? உங்களிடம் உள்ள கெட்ட குணத்தில் ஒரு சிலவாவது களைந்திருக்கிறீர்களா?

இப்படி சென்ற ஆண்டில் இருந்த உங்களுக்கும், தற்போதைய உங்களுக்கும் செய்யும் ஒப்பிடே சிறந்தது. ஒவ்வொரு ஆண்டு முடியும் போது நான் இவ்வாறே சுய பரிசோதனை செய்வது வழக்கம்.

உங்கள் நண்பர்/ உறவினர் மேல் கொள்ளும் பொறாமை என்னென்ன விதமான தீங்கு விளைவிக்கிறது?

முதலில் அந்த தீய எண்ணங்கள் உங்கள் மனதிற்கும் உடலுக்கும் கெட்டது செய்யும். வயிற்றெரிச்சல், அல்சர் போன்ற உடல் பிரச்சனைகளும் நிம்மதியின்மை போன்ற மன தொந்தரவுகளும் தரும்.

அடுத்து உங்கள் பொறாமை சம்பந்தப்பட்ட நபருக்கு உங்கள் பேச்சிலேயே தெரிந்து விடும்.

"உனக்கென்னப்பா.. சொந்த வீடு.. ரெண்டு பேரும் சம்பாதிக்கிறீங்க.. ராஜா மாதிரி இருக்கே" என்ற ரீதியில் பேசினால் நண்பருக்கு என்ன தோன்றும்? அவர் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் உங்களிடமிருந்து தூரம் செல்ல துவங்கி விடுவார்.

அவரது வளர்ச்சியை பார்த்து நீங்கள் "கண் வைப்பதாக" அவருக்கு நெருங்கியவர்களே சொல்ல கூடும். ( தனிப்பட்ட முறையில் இந்த கண் வைக்கும் சமாசாரத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை; ஆனால் இந்த உலகம் இன்னும் இந்த மாதிரி சமாசாரங்களை நம்பிக்கிட்டு தான் இருக்கு!!)

ஒரு துறையில் உன்னத நிலையை அடைந்தவரை, ஒரு ரோல் மாடலாக கொண்டு அவர் அளவு உயர வேண்டும் என உழைக்கலாம். அவர் வளர்ச்சியில் பாதி உயர்ந்தாலும் நாம் கணிசமான வளர்ச்சி அடைந்திருப்போம். ஆனால் நெருங்கிய நண்பர்/ உறவினர் வளர்ச்சியுடன் உங்கள் வளர்ச்சியை எக்காரணம் கொண்டும் ஒப்பிடாதீர்கள். அது எல்லா விதத்திலும் கெடுதலே செய்யும்.

மற்றவர் வெற்றியிலும், சந்தோஷத்திலும் நாம் வருத்தபடுபவராயிருந்தால், வாழ்நாளைக்கும் நாம் நிம்மதியாய் இருக்க முடியாது.

வெற்றி பெற, முன்னேற, மகிழ்ச்சி கொள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை உண்டு. அது நமக்கு மட்டுமே நடக்க வேண்டும் என நினைப்பது மூட தனம். வாழ்க்கையும் வாய்ப்புகளும் அனைவருக்கும் பொது.

*************

பிறரின் வெற்றியில் நீங்களும் மகிழுங்கள். எப்போதும் மகிழ்வாய் இருக்க இது சிறந்த வழி.

பிறர் முன்னேற்றத்தில் நீங்களும் பங்கு பெறுங்கள். உங்கள் முன்னேற்றமும் இயல்பாய் நடக்கும்.

பிறர் சிரிக்கும் போது சேர்ந்து சிரியுங்கள். அது உங்கள் உறவுக்கு நல்லது.

ஒரு மனிதன் அழும்போது அவனை பார்த்து யார் வேண்டுமானாலும் பரிதாப படலாம். ஆனால் உங்கள் வெற்றியில் உண்மையில் மகிழ்பவன் எவனோ அவனே உங்களின் உண்மையான நண்பன்.

Wednesday, 15 September 2010

Self Appraisal

A little boy went to a telephone booth which was at the cash counter of a store and dialed a number. The store-owner observed and listened to the conversation: 

Boy : "Lady, Can you give me the job of cutting your lawn?
Woman : (at the other end of the phone line) "I already have someone to cut my lawn."
Boy : "Lady, I will cut your lawn for half the price than the person who cuts your lawn now."
Woman : I'm very satisfied with the person who is presently cutting my lawn.
Boy : (with more perseverance) "Lady, I'll even sweep the floor and the stairs of your house for free.
Woman : No, thank you.

With a smile on his face, the little boy replaced the receiver. The store-owner, who was listening to all this, walked over to the boy.

Store Owner : "Son... I like your attitude; I like that positive spirit and would like to offer you a job."
Boy : "No thanks,
Store Owner : But you were really pleading for one.
Boy : No Sir, I was just checking my performance at the job I already have. I am the one who is working for that lady I was talking to!"

This is called "Self Appraisal"

The difference between dream and aim,

Dream requires Soundless sleep to see

Whereas Aim Requires Sleepless Efforts to Achieve...


Saturday, 11 September 2010

EAT FOR NEED NOT GREED


BMI <18.5 இருந்தா UNDER WEIGHT
18.5—24.9------------------NORMAL
25—29.9--------------------OVER WEIGHT
30—30.9--------------------OBESE
;>40-----------------------VERY OBESE
உங்க BMI 25 க்கு மேலேயும்,வயது 30 க்கு மேலேயும் இருந்தா கண்டிப்பா உங்க வாழ்க்கை முறையையும்,உணவு முறையையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

இடுப்பு சுற்றளவு[waist cicumference]:
இஞ்சு டேப்பை  எடுத்து இடுப்பு எலும்புக்கு மேலே வைத்து ஒரு சுற்று சுற்றிக்கொள்ளவும்.மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளியே விடும்பொழுது சுற்றளவை அளக்கவும்.பெண்களுக்கு 32இஞ்சுக்கு[80cm]
மேலும் ,ஆண்களுக்கு36 இஞ்சுக்கு[90cm] மேலும் இருக்க கூடாது. BMI ம்,இடுப்பு சுற்றளவும் அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 உங்க BMI 25க்கு மேலேயும் ,வயது 30க்கு மேலேயும் இருந்தா கண்டிப்பா உங்க வாழ்க்கை முறையையும்,உணவு முறையையும் மாத்திக்கனுங்க.ஆரோக்கியமான உணவை அளவோடு சாப்பிட்டு,தினமும் 30-45 நிமிடம் உடற் பயிற்சி செய்யவேண்டும்.முக்கியமா துரித உணவுக்கு தடை போட வேண்டும்.
HOW TO EAT SLIM: அளவை குறைக்க:[TO CUT DOWN PORTION]
*சாப்பாட்டுக்கு முன்னர் 1-2 டம்ளர் தண்ணீர் குடிக்கலாம்.*சாப்பிடும் பொழுது முதலில் ஒரு பழம்,ஒருசாலட்,1டம்ளர்மோர்[OR]சூப்,பிறகு
நம் தினப்படி உணவில் உள்ள காய்கறிகள் ,அப்புறம் கடைசியாக சாதம்.இப்படி சாப்பிடும் பொழுது சாதத்தின் அளவு கணிசமாக குறைந்துவிடும்.
மேலும் உணவுப் பொருள் ஒவ்வொன்றுக்கும் செரிமானமாகக் கூடிய நேரம்
வித்தியாசப்படும்.பழங்கள் விரைவாக செரித்துவிடும்,அதனால் தான் FRUITS FIRST.
*சின்ன தட்டில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு மெதுவாக சாப்பிடவேண்டும்.
இனிப்பை குறைக்க:[TO CUT DOWN SUGAR]

*இனிப்புகளை குறைப்பது நல்லது.
*பாட்டில்கள் மற்றும் டின்களில் அடைக்கப்பட்ட
குளிர்பானங்களை தவிர்க்கவும்.
*பழங்களை பழச்சாறாக்காமல் அப்படியே
சாப்பிடவும்.
உப்பை குறைக்க:[TO CUT DOWN SALT]
*ஊறுகாய்,கருவாடு,சீஸ் போன்ற உணவுகளை குறைப்பது நல்லது.தவிர்த்தால் இன்னும் நல்லது.
கொழுப்புச்சத்தை குறைக்க:[TO CUT DOWN FAT]*கொழுப்பு சத்து நீக்கப்பட்ட பால் மற்றும் பால் பொருட்களை உபயோகப்படுத்த வேண்டும்.
*பாலை நன்கு காய்ச்சி ,அதில் படியும் ஆடையை
எடுத்துவிட்டு உபயோகப்படுத்தவும்.
*டீ,காபியை பால் சேர்க்காமல் குடித்துப் பழகவும்.
*எண்ணெய்யில் வறுத்த,பொரித்த உணவுகளை
தவிர்த்து,ஆவியில் வேக வைத்த,grill செய்த உணவுகளை உண்ணலாம்.
*உடமபை குறைக்க நினைப்பவர்களுக்கு ஆட்டுக்கறி,
மற்றும் கோழிக்கறிக்கு மீன் பெஸ்ட்.
EAT MORE FISH.
*NON-STICK,MICROWAVEபோன்ற சாதனங்களை உபயோகப்படுத்தினால் நாம்
உபயோகிக்கும் எண்ணெய்யின் அளவை குறைக்கலாம்.
*முட்டையில் மஞ்சல் கருவைதவிர்க்கலாம்.

*துரித உணவை தவிர்க்கவும்

TO INCREASE FIBRE CONSUMPTION:


நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*நிறைய பழங்கள் சாபபிடவும்.

*நிறைய காய்கள்,கீரைகளை சேர்த்துக்கொள்ளவும்.பச்சையாக சாப்பிடக்கூடிய காய்களை சாலடாக சாப்பிடவும்.
வீட்டில் உள்ள நொறுக்கு தீனிகளை SEE THROUGH டப்பாக்களில் போடாமல்,OPAQUE டப்பாக்களில் போட்டு வைக்கவும்.அப்ப தான் tempt ஆக மாட்டோம்.கடைசியாக ஒண்ணே ஒண்ணுங்க,தேவைக்கு சாப்பிடுங்க,ஆசைக்கு
சாப்பிடாதீங்க."EAT FOR NEED NOT GREED".

Thursday, 26 August 2010

காயத்ரி மந்திரம்

காயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான்

                  விஞ்ஞான ரீதியில் பார்த்தாலும் இது மிகப் பெரும் உடற்பயிற்சி தான்.
விளக்கம் அடியில் இருக்கிறது.

ஓம் பூர் புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோன: ப்ரசோதயாத்


என்று ஆரம்பிக்கும் இம் மந்திரத்தில் ஏதோ சக்தி இருக்கிறது என்பதை கட்டாயம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இதை முறையாக ஒரு முறை செய்து பார்த்தால் வாழ்வில் வரும் மாற்றங்களை வைத்து நீங்கள் உணரலாம். சமைப்பதென்றால் கூட ஒரு முறையிருக்கிறதல்லவா. அப்படித்தான் இதுவும். இதற் கென்றொரு முறையிருக்கிறது.

இம் மந்திரத்தை விசுவாமித்திர முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின் ) மூன்றாவது மண்டலத்தில் (3.62.10 உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். என்று அழைக்கிறார்கள்.

இனி ஓதும் முறையைப் பார்ப்போமா? முதலில் உடல் சுத்தமாக இருக்க வேண்டும். ஒரு தூய இடமொன்றில் நின்றபடியோ அல்லது சப்பாணியிட்டோ அமர்ந்து ஓத வேண்டும்.

தொடங்கும் முன் ஓம்…….ஓம்………ஓம்…… என பிரணவ மந்திரத்தை 3 தரம் சொல்லித் தொடங்க வேண்டும்.
பின் மந்திரத்தை கீழ் சொன்னது போன்று கூற வேண்டும்.

மூச்சை உள்ளெடுத்துக் கொண்டு
ஓம் பூர் புவ: ஸுவ என்ற வரியை சொல்ல வேண்டும்.

பின் மூச்சை தம் கட்டிக் கொண்டு
தத் ஸவிதுர் வரேண்யம் என்ற வரியை சொல்ல வேண்டும்.

பின் மூச்சை வெளிவிட்டபடி
பர்கோ தேவஸ்ய தீமஹி என்ற வரியை சொல்ல வேண்டும்

இறுதியாக சுவாசத்தை நிறுத்தி
தியோ யோன: ப்ரசோதயாத் என்ற வரியை சொல்ல வேண்டும்.

இப்படி 108 தரம் சொல்ல வேண்டும். முடிக்கையிலும் பிரணவ மந்திரம் சொல்லித்தான் முடிக்கணும்.

இதன் விஞ்ஞான காரணம் பார்த்தால் முக்கியம் மூச்சு பயிற்சி தான் இங்கு நான் தென்கச்சி கோ. சுவாமிநாதன் ஐயா சொன்னதை சொல்கிறேன். “நாம் எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக சுவாசிக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதிக காலம் அதிகமாக உயிர் வாழலாம். உதாரணமாக ஆமைகள் நிமிடத்திற்கு 4 தரம் சுவாசிப்பதால் தான் 500 ஆண்டுகள் வாழ்கிறது” என்கிறார். இதையும் விஞ்ஞானம் தான் சொல்லியிருக்கிறது.

Thursday, 12 August 2010

அப்புறம் பார்த்துக்கலாம்

         நம்மில் பலருக்கு அந்தப் பழக்கம் இருக்கிறது. 'அப்புறம் பார்த்துக்கலாம்' என்று தள்ளிப் போட்டுக்கொண்டே வந்த வேலை ஒன்று, அதன் டெட்லைன் நெருக்கடியில் வந்து நம் கழுத்தை நெரிக்கும். அப்போதைக்கு அந்த வேலையைக் காட்டிலும் முக்கியமான வேலைகள் இருந்தாலும், முடித்தாக வேண்டிய கட்டாயம் இருப்பதால், இந்த வேலையைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கு. செமஸ்டருக்குப் படிப்பது, கடைசிக் கெடு தேதியில் இ.பி பில் கட்ட வரிசையில் நிற்பது, இன்டர்வியூ தின காலையில் சட்டையை அயர்ன் செய்ய அலைந்துகொண்டு இருப்பது, ஒரு முழு மாதத்தையும் உதாசீனப்படுத்திவிட்டு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் மாங்குமாங்கென்று அசைன்மென்ட் எழுதிக்கொண்டு இருப்பது என அடுக்கிக்கொண்டே போகலாம்.
           பி.எஸ்.எல்.வி. ராக்கெட் குறிப் பிட்ட தினத்தில் ஏவப்பட வேண்டும் என்றால், அதன் ஆரம்பக்கட்டப் பணிகளை ஏவும் தினத்தன்று காலையில் ஆரம்பிக்க மாட்டார்கள். சில வருடங்களுக்கு முன் திட்டமிட்டு, சில மாதங்களுக்கு முன் ராக்கெட்டை நிலைநிறுத்தி, சில வாரங்களுக்கு முன் கவுன்ட் டவுன் துவக்கி எனப் பரபரத்துக்கொண்டு இருப்பார்கள். 'லட்சியங்களை எட்டிப் பிடிக்கத் துடிக்கும் நாம் ஒவ்வொருவரும் ஒரு ராக்கெட்தானே! பிறகு ஏன், நாம் மட்டும் முன் கூட்டியே திட்டமிடத் தவறுகிறோம்?' 
இன்று என்ன செய்ய வேண்டும்?
இன்றே, இப்போதே செய்ய வேண்டிய வேலை என்ன? உங்களது நாளைய தினம் சிறப்பாக இருக்க, இன்று என்ன செய்ய வேண்டுமோ, அதை இன்றே, இப்போதே செய்துமுடியுங்கள்! கல்லூரிக்குச் செல்கிறோம். மறுநாள் வகுப்புத் தேர்வுக்கான நோட்ஸ் எடுக்கலாம், அடுத்த மாத கல்ச்சுரல் போட்டிகளுக்கான நடன ஒத்திகையில் ஈடுபடலாம், மாவட்ட அளவிலான பேஸ்கட்பால் போட்டிக்குப் பயிற்சி எடுக்கலாம். ஆனால், இவற்றை விட்டுவிட்டு கேன்டீன் டீ கிளாஸைக் கைகளில் உருட்டிய படி வெட்டி அரட்டையில் ஈடுபட்டு இருப்போம். அப்படியே டைம் மெஷினில் ஏறிச் சில நாட்கள் முன் சென்று பாருங்கள்... வகுப்புத் தேர்வில் பதில் தெரியாமல் முழித்துக்கொண்டோ, கல்ச்சுரல் போட்டி அன்று போதிய பயிற்சி இல்லாத பதற்றத்துடன் மேடையில் தட்டுத் தடுமாறிக்கொண்டோ, மாவட்டப் போட்டியின் இறுதிச் சுற்றில் மிகச் சில புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து, 'ச்சே! பாஸிங் கொஞ்சம் நல்லா பண்ணியிருந்தா ஈஸியா அடிச்சுருக்கலாம்டா அவனுங்களை!' என்று சலித் துக்கொண்டோ அமர்ந்து இருப்போம். தொலைநோக்குப் பார்வை என்பது எல்லாம் அடுத்த ஐந்து வருடங்களைக் கணக்கிட்டுத் திட்டமிட்டுச் செயல்படுவதல்ல; நாளை காலையில் நிம்மதியான மன நிலையில் எழுவதற்கு இன்று என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடுவது!
பள்ளி, கல்லூரி, அலுவலகம், வீடு என எந்தச் சூழலிலும் அன்றே செய்து முடிக்க வேண்டிய அவசிய வேலைகள் என்று சில இருக்கும். அதை முதலில் முடித்துவிட்டு, அடுத்தகட்டத்துக்குப் பயணம் செய்யுங்கள்.
நான் ரொம்ப பிஸியாக்கும்...
சச்சின் டெண்டுல்கர், ஏ.ஆர்.ரஹ்மான், ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் ஆகியோரைப் பாருங்கள். எப்போதும் சாந்தமான, அமைதி தவழும் முகத்தோடு, துளிப் பரபரப்பும் காட்டாமல் வளைய வந்துகொண்டு இருப்பார்கள். நம்மில் பலருக்கு அவர்களைக் காட்டிலுமா அதிக அளவில் வேலைப் பளு குவிந்துகிடக்கிறது? ஆனால், 'பிஸி... பிஸி!' என்று பந்தா பண்ணிக்கொண்டு ஓடிக்கொண்டே இருப்போம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், தனது நேரத்தை நிர்வகிக்கத் தெரியாதவர்கள்தான் 'பிஸி... பிஸி' என்று காலில் தேவை இல்லாத சக்கரத்தைக் கட்டிக்கொண்டு ஓடுவார்கள். படிப்புக்கு, அலுவலகத்துக்கு எந்த அளவு நேரம் ஒதுக்குகிறோமோ, அதே அளவுக்கு குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்க வேண்டும். வீட்டுக்கு வந்த பிறகும் அலுவல் நினைவுகளில் பதற்றம் காட்டிக்கொண்டே இருப்பதோ, 'ரொம்ப டென்ஷனா இருக்கு. நான் டி.வி. பார்க்கிறேன். தொந்தரவு பண்ணாதீங்க!' என்று குடும்ப உறுப்பினர்களிடம் வள்ளென்று விழுவதோ... உங்களை எந்தவிதத்திலும் ஒரு முழு மனிதனாக மாற்றாது. 'எப்போதும் பரபரப்பாக இருப்பவர்களைத்தான் இந்தச் சமூகம் மதிக்கும்!' என்ற நினைப்பு நம்மவர்கள் மனங்களில் ஊறித் திளைப்பதும் இந்த மனநிலைக்கு ஒரு காரணம். விசேஷங்களுக்கு வந்த இடத்திலும் செல்போனில் அலுவலக ஊழியர்களைத் திட்டி விரட்டிக்கொண்டு இருப்பார்கள் பலர். அது, சம்பந்தப்பட்டவர்களின் இயலாமையைத்தான் வெளிப்படுத்துவதாக அமையும். 'என்னால் எந்த வேலையையும் நினைச்ச மாதிரி செய்ய முடியலை!' என்ற பலவீனத்தைப் பூசி மெழுகும் வார்த்தைதான் 'பிஸி'. இனிமேலாவது எதையும் பூசி மெழுகாமல் இருப்போமே!
தினமும் என்னைக் கவனி!
எந்த வேலையில், எந்த சூழலில் இருந்தாலும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய சில தினசரி நடவடிக்கைகள்...
ஏதேனும் ஒரு வேலையில் ஈடுபட்டு இருக்கும்போது, ஒரு எஸ்.எம்.எஸ். அல்லது இ-மெயில் வந்தால், செய்துகொண்டு இருக்கும் வேலையில் இருந்துகவனத்தைத் திசை திருப்பா தீர்கள்!
உடனடியாக முடிவு எடுக்க வேண்டிய சின்னச் சின்ன விஷயங்கள் மீது உடனே முடிவு எடுத்துத் தீர்த்துவையுங்கள். சின்னச் சின்ன விஷயங்களாகத் தேங்குவதுதான், பிறகு நம்மை மலைக்கவைத்துவிடும்!
அவசியம், அவசரம் என்றால் மட்டும் அலுவல் நேரங்களில் செல்போன் பயன்படுத்துங்கள்!
12 நபர்களுக்கு மேல் கலந்துகொள்ளும் மீட்டிங் என்றால், முடிந்த மட்டும் புறக்கணிக்கப் பாருங்கள். அங்கு எந்த முழுமையான முடிவுகளும் எடுக்கப்பட மாட்டாது. உங்கள் நேரம்தான் காற்றில் கரைந்து இருக்கும்!
அன்றைய தினம் முடித்தே ஆக வேண்டிய வேலைகளை, சின்னச் சின்னக் குறிப்புகளாக எழுதிக் கண்ணில் படும் இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அதிலும் வேலையின் முக்கியத்துவத்துக்கு ஏற்ப A,B,C என அதன் அருகில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். A வேலைகள் முடிய முடிய B,C என்று தாவி ஓடிக்கொண்டே இருங்கள்.
உங்கள் 'நாளை' நலமாக இருக்க வாழ்த்துக்கள்!

Tuesday, 10 August 2010

ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS

ஆரோக்கியம் / உடல் நலம்

1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.

2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும், இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.

3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.

4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.

5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.

6. 2009விட இந்த வருடம் நிறைய புத்தகம் படியுங்கள்.

7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.

8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.

9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.



தன்னம்பிக்கை / சுயமுன்னேற்றம்



10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் / மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.

11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.

12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.

14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.

15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.

16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.

17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.

18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.



சமூகம்.



21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.

22. மன்னிக்கப் பழகுங்கள்.

23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.

24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.

25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.



வாழ்க்கை



26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.

27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.

29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.

30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

வெற்றி

           ஒரு நகரத்திற்கு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.
          அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம். இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர் 'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.
            இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது. மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான் ; அதற்கு இவ்வளவு அலங்காரமா!'' தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது ! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு
வாருங்கள்!''
           கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது. மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது. மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.
       படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''
''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

       ''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!. இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள். மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்! நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.
          இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப்போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு !'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.
இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி
பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே!!!!!!!

மனம் மகிழுங்கள்

,நமது மனது எப்படி இருக்கிறதோ அப்படித்தான் அது உலகத்தை உணர்கிறது. மனது உலகத்தை எப்படி உணர்கிறதோ அப்படித்தான் உலகம் நம்மைப் பிரதிபலிக்கிறது.

குழப்புகிறதோ?

ரொம்ப சிம்பிள்.

நீங்கள் உற்சாகமாய், “குட் மூடில்“ இருக்கிறீர்கள் என்றால் நீங்களும் மற்றவர்களிடம் அன்பாய், இனிமையாய், நகைச் சுவையாய்ப் பேசுவீர்கள்.. பதிலுக்கு அவர்களும் உங்களிடம் அப்படியே பிரதிபலிப்பர். நீங்கள் சிரித்து நண்பரின் முதுகைத் தட்டினால் அவர் கத்தி எடுத்துக் கொண்டு உங்களைக் குத்த வரப்போவதில்லை. பதிலுக்கு அவரும் சிரித்தாக வேண்டும். உலகமே அன்று உங்களுக்கு மகிழ்ச்சியாய், இனிதாய்த் தோன்றும்.

நீங்கள் உற்சாகம் குன்றி, வருத்தத்திலும் அழுது வடியும் முகத்துடனும் இருந்தால்? பொறுமைசாலியான நண்பராய் இருந்தால், ஒரு சிங்கிள் டீ வாங்கிக் கொடுத்து உங்கள் சோகக் கதையைக் கேட்டுவிட்டு எஸ்கேப் ஆகலாம். அல்லது, தூரத்திலிருந்தே உங்களைப் பார்த்துவிட்டு ஓடும் பஸ்ஸில் ஃபுட்போர்டில் தாவி ஏறி ஓடிவிடலாம். அதைக் கண்டால் மேலும் சோகம் பெருகி, மேலும் வருத்தப்பட்டு... கஷ்டம்.

நம்மைப் பற்றி நம் மனதிலுள்ள சுயபிம்பம் தான், நாம் எப்படி நடந்துகொள்ளப் போகிறோம் என்பதை நிர்ணயிக்கிறது. அதன் அடிப்படையில் தான் நாம் யாரிடம் பழகப் போகிறோம், என்ன செய்யப் போகிறோம், அல்லது செய்யாமல் இருக்கப் போகிறோம் என்பது நிர்ணயிக்கப்படுகிறது..

சரி, நம்மைப் பற்றிய பிம்பம் நமக்குள் எப்படி உருவாகிறது?

அது நமது அனுபவங்களின் கலவை. நாம் சந்தித்த வெற்றி, தோல்வி, நம்மைப் பற்றி நாம் நினைப்பது, மற்றவர்களைப் பற்றி நம் மனதில் ஏற்படும் அபிப்ராயம், மற்றவர்கள் நம்மிடம் நடந்து கொள்ளும் முறை, இவையெல்லாம் நம்முடைய சுயபிம்பம் உருவாகும் காரணிகள். அதை மனம் நம்புகிறது. அந்த பிம்பத்தின் கட்டுமானததிற்குள்ளேயே நம்முடைய வாழ்க்கையை அது அமைத்துக் கொள்கிறது.

அந்த சுயபிம்பம் தான், இந்த உலகத்தை நாம் எந்தளவு நேசிக்கப் போகிறோம், அதில் வாழ என்னென்ன முயற்சி எடுக்கப் போகிறோம் என்பதையும், நாம் வாழ்க்கையில் எதை சாதிக்கப் போகிறோம் என்பதையும் நிர்ணயிக்கிறது.

நாம் யார் என்று நினைக்கிறோமோ அது தான் நாம்!

அந்த சுயபிம்பம் நம்மை எப்படி வடிவமைகிறதோ அது தான் நாம்!

பள்ளியில், கல்லூரியில் ஏதாவது ஒரு பாடம் படு்த்தியெடுக்கும். ஒருவர் பௌதிகத்தில் வீக்காக இருப்பார். “என்னதான் தலைகீழாக நின்றாலும் இது என் மண்டையில் ஏறாது” என்ற முடிவிற்கே வந்துவிடுவார். ஆரம்பத்தில் ஏதாவது ஒரு பெளதிக விதி சற்றுப் புரியாமல் ஆகி, அதைத் தொடர்ந்து அந்தத் தேர்வில் சற்றுக் குறைந்த மதிப்பெண் பெற்றிருக்கலாம். அதுவே பின்னர் அலர்ஜியாக உருப்பெற்று, ”ம்ஹும்! காப்பி அடிக்கலாமா? பிட்டு அடிக்கலாமா?” என்று குறுக்குவழிக்கு மனம் தயார்பட ஆரம்பித்திருக்கும்.

மனம் மேலும் மேலும் அந்தப் பாடத்தில் அவரைப் பின்தங்க வைக்கும். அப்படியே தப்பித் தவறிச் சற்று நல்ல மதிப்பெண் கிடைத்துவிட்டாலும், ”ஹ! எல்லாம் குருட்டு அதிர்ஷ்டம்” என்று தான் மனம் நம்பும். அடுத்த தேர்வில் தோல்வி வந்தால், ”அதான் அப்பவே தெரியுமே!” என்றுதான் மனம் நிம்மதி அடையும்.

பௌதிகம், உதாரணம் மட்டுமே! வாழ்க்கையில் ஒருவர் இப்படி ஏதாவது ஒரு விஷயத்தில் பின்னடைந்து இருக்கலாம், வீக்காக இருக்கலாம்.

சைக்களில் டபுள்ஸ் அடிக்கும் போது ஒருமுறை விழுந்திருப்பார். அதன் பிறகு தம்மால் டபுள்ஸ் அடிக்க முடியாது என்று முடிவெடுத்து அதையே நம்ப ஆரம்பிப்பார். தாம் மனதளவில் அதைப் பலமாய் நம்புவது மட்டுமில்லாது, பார்ப்பவரிடமெல்லாம் அதைப் பறை சாற்றிககொள்ளவும் செய்வார்.. எதிர் வீட்டு மாமா, அடுத்த வீட்டு வேலைக்காரி, காலையில் பால் சப்ளை செய்பவர் என்று யாரிடமெல்லாம் சகஜமாய்ப் பேசுவாரோ அத்தனைப் பேரிடமும் அவரது பலவீனம் விளம்பரம் ஆகும். எவ்வளவுக்கு எவ்வளவு அவர் அப்படிச் சொல்லிக் கொள்கிறாரோ மற்றவர்களும் அந்த அளவுக்குஅதை நம்ப ஆரம்பித்து விடுகிறார்கள். அதைக் கொண்டு மனம் மேலும் தன்னை அப்படியே நம்ப, அவரது பலவீனமான சுயபிம்பம் வலுவடைந்து விடுகிறது.

இதை மாற்ற, நம்மைப் பற்றிய உயர்ந்த சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்

அதற்கு என்ன செய்யலாம்.

மாத்தியோசி!

நம்முடைய பாஸிட்டிவ் தன்மைகளை உணர்ந்து நம்மால் நம் குறைகளைக் களைந்து முன்னேற முடியும் என்ற தன்னம்பிக்கை முதல்படி. தம்முடைய சக்தியையும் வலிமையையும் உணர்ந்து கொள்ள ஆரம்பித்துவிட்டால், அதுவே ஒருவரை வேகமாய் முன்னேற வைக்கும்.

“என்னதான் ஸ்பின் போட்டால்லும் என்ன? துரத்துகிறேன் பார் அதைப் பவுண்டரிக்கு” என்று நினைத்தால் அதுதான் தன்னம்பிக்கை. அம்பயர் கையை வேகமாய் வலமும் இடமும் ஆட்ட வேண்டியது தான்.

மாறாக “இந்த ஸ்பின்னெல்லாம் தாங்குவேனா” என்று நினைத்தால் அம்பயர் ஒற்றைக் கையின் ஒற்றை விரலை மேலே நீட்டி விடுவார்.

“வர வருமானத்திலே எப்படித் தான் குப்பைக் கொட்டுவதோ” என்று நினைத்தால் மாசா மாசம் பற்றாக்குறை தான்.

“எப்படியும் சமாளிச்சுடலாம்” என்று நினைத்துப் பாருங்களேன். மாயம் நிகழும்.

இது இப்படியிருக்க,

தமது வாழ்க்கையில் ஓரளவு தான் நல்லது நடக்கும் என்று சிலரது மனம் தேவையில்லாமல் ஒரு வரைமுறை வைத்திருக்கும். அவரது வாழ்க்கையில் நல்லதே நடந்து கொண்டிருக்கிறது என்று வையுங்கள், ”அதெப்படி எல்லாமே இவ்ளோ சூப்பரா நமக்கு நடந்து கொண்டிருக்கிறது” என்று அவரது மனம் ஆச்சரியமும், இனந்தெரியா பதட்ட நிலையையும் அடைய, அடுத்து ஏதாவது ஒரு தீயது நிகழலாம்.

“அதானே பார்த்தேன். அப்படி நமக்கு எல்லாமே ஒழுங்கா நடந்துட்டாலும்?” என்று அப்பொழுதுதான் மனம் சமாதானம் அடையும்.

மனதை இன்பமாக வைத்துக் கொள்ள வரைமுறை தேவையில்லை. நம்மை விட வாழ்க்கையில் உயர்ந்தவர்கள் எத்தனைக் கோடி உள்ளார்களோ அதே போல் நமக்கும் கீழே உள்ளவர் கோடி.

எனவே நமது சுயபிம்பத்தை சிறப்பானதாக ஆக்கிக்கொள்ள நமது வாழ்க்கையின் தரம், அமைதி, நோக்கம் இவற்றைத் தரமானதாக ஆக்கிக் கொள்ளவேண்டும்.

இங்கு ஒன்றை மிகக் கவனமாய் மனதில் கொள்ள வேண்டும். நம்மைப் பற்றிய உயர்வான சுயபிம்பம் என்பதற்கும் கர்வம், அகந்தை தலைக்கணம் போன்ற சொற்களுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசத்தை உணர வேண்டும்.

இல்லையென்றால் என்னாகும்?

தரமான சுயபிம்பம் மனமகிழ்வுடன் நாம் வாழ்க்கையில் உயர வழிவகுக்கும்.

Tuesday, 20 July 2010

தொப்பை

இளைச்சவனுக்கு எள்ளு... கொழுத்தவனுக்கு கொள்ளு'னு கிராமத்துல சொல் வாங்க. தண்ணியில கொள்ளுப் பயறைப் போட்டு, கொதிக்க வச்சு அதோட கொஞ்சம் இந்துப்பு சேத்து தொடர்ந்து ஒரு மாசம் சாப்பிட்டுப் பாருங்க. நிச்சயம் எடை குறைஞ்சிருக்கும்.
பப்பாளிக்காயை சமைச்சு, வாரத்துக்கு ரெண்டு நாள் வீதம் மொத்தம் 40 நாள் சாப்பிடுங்க. உடல் எடை குறையும். முள்ளங்கி யையும் அப்பப்ப சமையல்ல சேர்த்தா கைமேல் பலன் கிடைக்கும்.
சிலருக்கு தொப்பை போட் டிருக்கும், இதைப் பார்த்து 'பானை வயிறு'னு கிண்டல் பண்ண ஆரம்பிச்சுருவாங்க. தினமும் வாழைத்தண்டு சாறு எடுத்துக் குடிச்சா... தொப்பைக்கு டாட்டா சொல்லலாம். கிட்னியில இருக்கற கல்லைக் கரைக்கற மாதிரியே, தொப்பையையும் இது கரைச்சுடும். இந்தச் சாறு குடிக்குறப்ப தயிர், மோர் சேர்க்கக் கூடாது.

மஞ்சள்காமாலை

மஞ்சள்காமாலையைத் துரத்துவதற்கான சில ரெசிபிகளை இப்போது பார்ப்போம்.
மஞ்சள்காமாலை என்றாலே... எதையும் சாப்பிடவே பிடிக்காது. காரணம்... பத்தியம் என்ற பெயரில் கொடுக்கப்படும் உணவு வகைகள்தான். ஆனால், காலையில் முள்ளங்கி ஜூஸ், மதியம் நெல்லிக்காய் சாதம், சுவையான ரசம் என்று மஞ்சள்காமாலையை குணமாக்கக்கூடிய சுவையான உணவுகளையும் நீங்கள் தயாரித்துச் சாப்பிடலாம். இதோ அந்த ரெசிபிகள்...
முள்ளங்கி ஜூஸ்
தேவையானவை: நறுக்கிய முள்ளங்கி - ஒரு கப், உப்பு, மிளகுத் தூள் - கால் டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். இதை வடிகட்டாமல் அருந்தவேண்டும்.
நெல்லிக்காய் சாதம்
தேவையானவை: வடித்த சாதம் - 2 கப், நெல்லிக்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத் தம் பருப்பு - தேவையான அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உளுந்து பொடி (வறுத்து பொடித்தது) - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப் பிலை, உப்பு - சிறிதளவு,
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து நெல்லிக்காய் துருவலைப் போட்டு வதக்கவும். பிறகு... மஞ்சள்தூள், வடித்த சாதம், உளுந்து பொடி ஆகியவற்றைப் போட்டுக் கலக்கி சாப்பிடவும்.
பேரிக்காய் ரசம்
தேவையானவை: பேரிக்காய் - 4, தக்காளி - 2, சின்ன வெங்காயம் - 10, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகு - 2, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, பூண்டு - 2 பல், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காய்களை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு, மிளகை நசுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அதைப் போடவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றையும் அதில் போட்டு தண்ணீர்விட்டு கொதிக்க விடவும். பிறகு, பேரிக்காயை போட்டுக் கொதித்ததும், மஞ்சள்தூள் சேர்த்து இறக்கவும். பேரிக்காயில் நிறைய தண்ணீர் இருப்பதால் மேற்கொண்டு தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.

ஆப்பிள் கன்னங்கள் அழகு கெடாமலிருக்க..!

"இந்தக் குண்டு கன்னத்தால முகம் ரொம்பக் குண்டா தெரியுது..." என்று அலுத்துக் கொள்பவர்கள், கன்னங்களைக் குறைக்க, அதேசமயம் அவற்றின் பொலிவு போகாமல் காக்க....
தினமும் காலையில் கேரட் - தக்காளி ஜூஸ் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.
பார்லி பவுடருடன் கேரட் சாறு கலந்து வாரம் இருமுறை கன்னம், முகத்தில் தடவி கழுவலாம்.
பார்லி பவுடர் அல்லது கேரட் சாறுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து வாரம் ஒரு முறை முகத்தில் பூசலாம். தொடர்ந்து இதைச் செய்துவந்தால் முகத்திலிருந்து தனித்துத் தெரியாமல் உப்பிய கன்னங்கள் உள் வாங்குவதுடன், பளபளப்பு மற்றும் பொலிவு முகத்தில் கூடும்.
வயது ஏறும் காரணத்தினாலோ, ப்ளீச்சிங், ஃபேஷியல்கள் தந்த பரிசாலோ... கன்னங்களில் சதை இளகித் தொங்குகிறதா... அதை மீண்டும் 'ஸ்டிஃப்' ஆக்க...
சர்க்கரை, வெள்ளரி விதை... இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் கலந்து கன்னம், முகத்தில் ஒரே சீராகப் பூசுங்கள்.
50 மில்லி தேங்காய் எண்ணெயை நன்றாகக் காய்ச்சி... அதில் 25 கிராம் கஸ்தூரி மஞ்சள்தூள், 10 கிராம் விரலி மஞ்சள்தூள், சிறு துண்டுகளாக நறுக்கிய வெட்டிவேர் 10 சேர்த்து மூடி விடுங்கள். இந்தத் தைலத்தை தினமும் குளிப்பதற்கு முன் கன்னங்களில் மேலிருந்து கீழாக தேய்த்து மசாஜ் போல செய்துகொள்ளுங்கள்.
இப்படி செய்வதால், வறண்டு தொய்ந்த தோலில் எண்ணெய்ப் பசை ஏறி, கன்ன சதை இறுகும்.
சிலருக்கு தலையில் நீர் கோத்துக் கொண்டாலும், கன்னமும் முகமும் பெரிதாகக் காட்டும். இதற்கு கறிவேப்பிலை ஜூஸ், வாழைத்தண்டு, முள்ளங்கி இவற்றை வேக வைத்த தண்ணீர் போன்றவற்றை அருந்துவது அருமருந்து. அவை முகத்தில் உள்ள நீரை வற்றச்செய்து, முகத்துக்கு சீரான வடிவம் கொடுக்கும்!

Drinking Water at the Correct Time ........!!

Drinking water at the correct time maximizes its effectiveness on the Human body:

2 glasses of water after waking up helps activate internal organs

1 glass of water 30 minutes before a meal - helps digestion

1 glass of water before taking a bath - helps lower blood pressure

1 glass of water before going to bed - avoids stroke or heart attack


Click here to join nidokidos

Saturday, 3 July 2010

மாற்றங்கள் உருவாக்கும் வாய்ப்புகள்

வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் இடையே எத்தனையோ வேறுபாடுகள் இருக்கின்றன என்றாலும் ஒரு வேறுபாடு மிகவும் பிரதானமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அது என்னவென்றால் வெற்றியாளர்கள் மாற்றங்கள் நிகழும் போது அதற்குத் தகுந்தாற் போல் உடனடியாக மாறி அந்த மாற்றங்களுடன் வரும் வாய்ப்புகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தோல்வியாளர்களோ நிகழும் மாற்றங்களைக் கண்டு முகம் சுளிக்கிறார்கள். மனம் வருந்துகிறார்கள். புலம்புகிறார்கள். எனவே அந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ளவும், மாற்றங்களுடன் வரும் வாய்ப்புகளைக் கண்டு கொள்ளவும், பயன்படுத்தவும் தவறி விடுகிறார்கள்.

உலகில் மாறுதல் ஒன்றே மாறாத நியதி என்று சொல்வார்கள். மாறுதல் உலகம் இயங்குவதன் அறிகுறி. உலகம் இயங்கிக் கொண்டு இருக்கும் வரை மாறுதலும் இருந்து கொண்டே இருக்கும். உலகம் யாருடைய தனிப்பட்ட கருத்தின்படியும் இயங்குவதில்லை. அவர்கள் கருத்தைப் பொருட்படுத்துவதுமில்லை. அது பிடிக்காதவர்கள் உலகில் பின்னுக்குத் தள்ளப்படுவார்கள்.

மாறுகின்ற காலத்தில் மாறுகின்ற தேவைகளுக்கேற்ப தங்கள் வழி முறைகளை மாற்றிக் கொண்டு செயல்படும் மனிதர்கள் மட்டுமே வெற்றியடைகிறார்கள். நேற்றைய தேவைகளுக்கேற்ப உங்களது இன்றைய செயல்பாடுகள் இருந்தால் எப்படி வெற்றி கிடைக்கும்?

அல்கெமிஸ்ட் என்ற பிரபல நாவலில் இதற்கு ஒரு அழகான உதாரணத்தைக் காணலாம். ஒரு சிறிய மலை மேல் அழகான கண்ணாடிப் பொருள்க¨ள் விற்கும் கடை ஒன்று இருந்தது. ஒரு காலத்தில் மிக நன்றாக வியாபாரம் நடந்த கடையில் காலம் செல்லச் செல்ல வியாபாரத்தில் தொய்வு ஏற்பட்டது. மலை அடிவாரத்திலேயே நிறைய கடைகள் வந்து விட யாரும் கண்ணாடிப் பொருட்களை வாங்க அந்த மலைக்கு மேல் வருவதை நிறுத்தினர். அந்த கடைக்காரருக்கோ அந்த வியாபாரம் தவிர வேறு வியாபாரமும் தெரியாததால் வேறு வழியில்லாமல் அதையே நடத்திக் கொண்டு வந்தார்.

சாண்டியாகோ என்ற இளைஞன் அவர் கடையில் வேலைக்குச் சேர்ந்தான். சம்பளம் மிகக் குறைவாகவே தந்த கடைக்காரர் நடக்கும் விற்பனையில் அதிக கமிஷன் தருவதாகச் சொன்னார். வியாபாரமே இல்லாததால் கமிஷன் எங்கே தரப் போகிறோம் என்ற எண்ணம் அவருக்கு. இரண்டே நாளில் உண்மை நிலவரத்தை சாண்டியாகோ உணர்ந்தான். வேறு கடைகளே இல்லாத காலத்தில் செய்த வியாபார முறையையே இப்போதும் கடைக்காரர் பின்பற்றுகிறார் என்று புரிந்தது. அவன் அவரிடம் கடைக்கு வெளியே ஒரு ஷோ கேஸ் வைத்து அழகான புதிய பொருட்களைப் பார்வைக்கு வைத்தால் கீழே செல்பவர்களில் சிலரை அது ஈர்க்கக்கூடும் என்று சொன்னான். கடைக்காரருக்கு பெரிய ஆர்வம் இல்லா விட்டாலும் அப்படியே செய்தார். புதியவர்கள் பலரும் வர ஆரம்பிக்க விற்பனையும் அதிகரித்தது.

ஒரு நாள் மலையேறிய ஒருவர் குடிக்க நல்ல தேநீர் கடை கூட இல்லை என்று அங்கலாய்த்தது சாண்டியாகோ காதில் விழுந்தது. அவன் கடைக்காரரிடம் சொன்னான். "நாம் தேநீரும் தயாரித்து நம்முடைய அழகான கண்ணாடிக் கோப்பைகளில் தந்தால் தேநீரும் விற்கலாம். பலரும் வீடுகளிலும் அது போல் குடிக்க கண்ணாடிக் கோப்பைகளை வாங்கிக் கொண்டு போவார்கள்" என்றான். அவருக்கு அதிலும் பெரிய பலன் கிடைக்கும் என்று தோன்றவில்லை. ஆனால் சம்மதித்தார்.

அவன் சொன்னபடியே பலரும் வந்து தேநீர் குடித்து அது போன்ற அழகான கோப்பைகளை வாங்கிக் கொண்டு போனார்கள். நாளடைவில் அந்தக் கடை பிரபலமாகி வியாபாரமும் அதிகரித்து மேலும் இரண்டு பேரை வேலைக்கு எடுத்துக் கொண்டு கூட்டத்தை சமாளிக்க வேண்டி இருந்தது. சாண்டியாகோ வந்திராவிட்டால், காலத்தின் மாறுதல்களுக்கு ஏற்ப புதிய வழிகளைப் பின்பற்றியிரா விட்டால் அந்தக் கடையை அவர் விரைவில் மூடி விட வேண்டி இருந்திருக்கும்.

மாறுதல் இயற்கை என்றாலும் அது ஏற்படுத்தும் புதிய சூழல் நமக்குப் பிடிபடாமலும், புரியாமலும், சிறிது அசௌகரியமாகவும் இருப்பது இயல்பே. ஆனால் மாறுதல் ஏற்படும் போது இது வரை கிடைத்திராத வாய்ப்புகளும் கிடைக்கும் என்ற ஞானத்தோடு மாறுதல்களை எதிர்கொள்வதே அறிவு.

சில சமயங்கள் மாறுதல்கள் நம் வாழ்க்கையின் அஸ்திவாரத்தையே அசைப்பனவாகவும் இருப்பது உண்மையே. இருப்பவை அனைத்தையும் இழக்க நேர்வது போன்ற மாறுதல்கள் பூதாகாரமாக இருக்கலாம். ஆனால் கவலையில் ஆழ்வதும், விதியை நொந்து கொள்வதும் அதற்குத் தீர்வாகாது. மாறுதல்கள் உணர்த்தும் பாடங்களைப் படித்து, தரும் வாய்ப்புக¨ளை முறையாகப் பயன்படுத்தி மீண்டு வருவதே வெற்றி. சிலவற்றை இழந்தால் ஒழிய நம் பார்வை வேறுபக்கம் திரும்பாது என்பதற்காகவே கூட விதி நம்மை சிலவற்றை இழக்க வைக்கலாம். ஒருவிதத்தில் அது நமக்கு அனுகூலமே ஒழிய நஷ்டமல்ல.

சொய்சீரோ ஹோண்டா என்ற இளைஞர் படிக்கும் காலத்திலேயே கார்களுக்குப் பயன்படுத்தும் புதிய பிஸ்டன் ஒன்றை உருவாக்கி அதை டயோட்டா கார் கம்பெனிக்கு அனுப்பினார். அந்த வகை பிஸ்டனைப் பயன்படுத்தினால் பல விதங்களில் காரோட்டம் மேம்பாடடையும் என்று அவர்களுக்குத் தெரிவித்தார். அது தங்களுடைய தேவைகளைப் பூரணமாகப் பூர்த்தி செய்யவில்லை என்று தெரிவித்து டயோட்டா கம்பெனியினர் திருப்பி அனுப்பி விட்டனர். மீண்டும் இரண்டு வருடங்கள் கழித்து அந்தப் பிஸ்டனை மேம்படுத்தி வடிவமைத்து அதை டயோட்டாவுக்கு மறுபடி அனுப்ப அந்தப் புதிய பிஸ்டனை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதைத் தயாரித்துத் தரும் உரிமை ஹோண்டாவுக்கு அளிக்கப்பட்டது.

ஹோண்டா தன்னிடம் இருப்பவை அனைத்தையும் முதலீடாகப் போட்டு பிஸ்டன் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றைக் கட்டத் தொடங்கினார். தொழிற்சாலை கட்டும் பணி முடியும் தருவாயில் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டு தொழிற்சாலை தரைமட்டமாகியது. ஹோண்டா தன் மனைவியின் நகைகளை விற்று, நண்பர்களிடம் கடனை வாங்கி மீண்டும் தொழிற்சாலை கட்டத்துவங்கினார். துரதிர்ஷ்டவசமாக அந்தக் கட்டிடம் முடிவடையும் நேரம் இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானது. எதிரிகளின் விமானத் தாக்குதலால் அந்தக் கட்டிடமும் தவிடுபொடியானது.

இதையெல்லாம் மாற்றம் என்று சொல்வதை விட நாசம் என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும் என்றாலும் ஹோண்டா விதியை நொந்து கொண்டு முடங்கவில்லை. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் கடுமையான பெட்ரோல் மற்றும் கேஸ் தட்டுப்பாடு ஜப்பானைத் தாக்கியது. கார்களை இயக்க முடியாமல் பலரும் அவதியுற்றனர். ஹோண்டாவும் எங்கும் காரை எடுத்துச் செல்ல முடியாமல் தத்தளித்தார். வேறு வழி இல்லாமல் தன் சைக்கிளுக்கு மோட்டார் ஒன்றைப் பொருத்திக் கொண்டு வீட்டுக்குப் பொருட்கள் வாங்கச் சென்றார். அதைப் பார்த்த அக்கம்பக்கத்து வீட்டாரெல்லாம் தங்களுக்கும் அது போன்ற ஒரு மோட்டார் பொருத்திய சைக்கிள் செய்து தருமாறு கேட்க ஆரம்பித்தனர். ஹோண்டா செய்து தர ஆரம்பித்தார். சீக்கிரமே அவரிடமிருந்த மோட்டார்கள் எல்லாம் தீர்ந்து போயின.

தன் முயற்சிகளில் சிறிதும் தளராத விக்கிரமாதித்தன் போல் ஹோண்டா மீண்டும் ஒரு தொழிற்சாலை கட்ட எண்ணினார். இந்த முறை பிஸ்டன் தயாரிக்கும் தொழிற்சாலை அல்ல, தன் புதிய கண்டுபிடிப்பான மோட்டார் பைக் தயாரிக்கும் தொழிற்சாலையாக. ஆனால் இருப்பதையெல்லாம் முன்பே இரு முறை தொழிற்சாலை கட்டித் தொலைத்திருந்த அவருக்கு முதலீடு செய்யப் பணம் இருக்கவில்லை. சிந்தித்துப் பார்த்து ஒரு முடிவெடுத்தார்.

ஜப்பான் முழுவதும் இருந்த 18000 சைக்கிள் கடைக்காரர்களுக்கு தன் புதிய கண்டுபிடிப்பைப் பற்றிக் கடிதம் எழுதினார். அன்றைய சூழ்நிலையில் மிகவும் சுலபமாக விலை போகும் பைக்கைத் தயாரிக்க அவர்களால் முடிந்த அளவு முதலீடு செய்தால் நல்ல லாபம் ஈட்டலாம் என்று அவர் விவரித்தார். 18000 கடைக்காரர்களில் சுமார் 5000 பேர் முதலீடு செய்ய முன் வந்தனர். அவருடைய கனவுத் தொழிற்சாலை உருவாகியது.

முதலில் அவர்கள் தயாரித்த மோட்டார் பைக் பெருமளவில் விலை போகவில்லை. காரணம் அதன் எடையும், பெரிய வடிவமும். எனவே ஹோண்டா அந்த இரண்டையும் சரி செய்து சில மாற்றங்களுடன் புதிய மோட்டார் பைக்கை உருவாக்கினார். அது உடனடியாக வெற்றி பெற்றது. பின் வெற்றி அவரை நிழலாகப் பின் தொடர்ந்தது. கார்களையும் உருவாக்க ஆரம்பித்தார். இன்று ஹோண்டா கார்ப்பரேஷன் உலகப் புகழ் பெற்ற பெரிய நிறுவனமாக இருப்பது அனைவருக்கும் தெரியும்.

மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்பதை ஆழமாக உணர்ந்திருங்கள். வழக்கம் என்கிற சுகமான சங்கிலி புதியன வரும் போது அதிருப்தி கொள்ளக் கூடும். ஆனாலும் வழக்கமான வாழ்க்கையில் சிறைப்பட்டு இருந்து விடாதீர்கள். மேற்போக்காகப் பார்க்கையில் பிரச்னைகள் போலத் தோன்றினாலும் எல்லா மாற்றங்களும் தங்களுடன் வாய்ப்புகளையும் சேர்த்தே அழைத்து வருகின்றன. வரும் மாற்றங்கள் நம் அபிப்பிராயங்களுக்கேற்ப மாறிவிடுவதில்லை. மாற்றங்கள் காலடி மண்ணையே அசைக்கிறதாகக் கூட சில நேரங்களில் இருக்கலாம். செயலிழந்து மட்டும் போய் விடாதீர்கள். அது கண்டிப்பாய் தோல்வி என்னும் புதைகுழியில் உங்களை ஆழ்த்தி விடும். எனவே பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ உங்கள் அபிப்பிராயங்களை ஒதுக்கி விட்டு வாய்ப்புகளைக் கவனியுங்கள். எப்படிப் பயன்படுத்தலாம் என்று சிந்தியுங்கள். நம்பிக்கையுடனும் உறுதியுடனும் செயல்படுங்கள். கண்டிப்பாக வெற்றிவாகை சூடுவீர்கள்.

Friday, 2 July 2010

கலைந்த கனவும் கலையாத மனமும்

அறிவு கூர்மையும், உழைக்கும் உறுதியும் இருந்து விட்டால் கூட காணும் கனவு நனவாக முடியும் என்கிற கட்டாயமில்லை. விதியின் தீர்மானமும் ஒத்துழைத்தால் மட்டுமே ஒரு கனவு நனவாக முடியும் என்ற கசப்பான உண்மையை ஒரு ஏழை இளைஞன் தன் வாழ்வில் உணர்ந்தான்.

மைசூரைச் சேர்ந்த அந்த இளைஞன் ஒரு ஆசிரியரின் மகன். பள்ளிக்கூடத்தில் அவன் மிக புத்திசாலியான மாணவன் என்று பெயரெடுத்தான். அவனுடைய நீண்ட நாள் கனவு ஐஐடியில் (IIT- Indian Institute of Technology) பொறியியல் வல்லுனராகப் பட்டம் பெற வேண்டும் என்பது தான். அதற்கு நுழைவுத் தேர்வில் மிக நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டும். நுழைவுத் தேர்வு மிகக் கடினமானது. அதற்கான விலை உயர்ந்த புத்தகங்கள் வாங்குமளவு வசதி இல்லை. அதற்கு அளிக்கப்படும் பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் பண வசதியும் இல்லை. ஆனாலும் அந்த இளைஞனும் அவனுடைய நண்பர்கள் சிலரும் சேர்ந்து அந்த நுழைவுத் தேர்வை எழுத எண்ணினர்.

முந்தைய வருடக் கேள்வித்தாள்களுக்கான பதிலை எல்லாம் எல்லோரும் கலந்து விவாதித்து எழுதிப் பார்த்துக் கொண்டு என்னவெல்லாம் கேட்கக் கூடும் என்று ஆலோசித்து அனைவரும் கடினமாக உழைத்தனர். அந்தக் கடினமான நுழைவுத் தேர்வில் அந்த இளைஞன் அகில இந்திய அளவில் பதினேழாம் இடத்தில் வந்தான். புத்தகங்கள் வாங்காமல், பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லாமல் அந்த இடத்தைப் பிடிப்பது சாதாரண விஷயமில்லை. அவன் அடைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை.

ஆனால் ஐஐடியில் பட்டப்படிப்பு முடிக்க ஆகும் செலவை அறிந்த போது அவனுடைய தந்தை அதிர்ச்சி அடைந்தார். ஐந்து மகள்களும், நான்கு மகன்களும் உடைய அந்தத் தந்தைக்கு ஒரு மகனின் கல்வியை மட்டும் கவனித்தால் போதாதல்லவா? ஆசிரியரான அவருக்கு அந்த அறிவாளியான மகனின் கனவுக்கு உதவ முடியவில்லையே என்ற வருத்தம் எந்த அளவு இருந்திருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை. மகனை அழைத்து அவன் கனவுப் படிப்பு தற்போதைய குடும்ப சூழ்நிலையில் சாத்தியமல்ல என்று சொன்னார்.

இறுதியில் அந்த இளைஞன் தன் கனவைக் கலைக்க வேண்டியதாயிற்று. அவனை விடக் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற அவனுடைய சில நண்பர்கள் ஐஐடியில் சேர அவர்களை வழியனுப்பி விட்டு வந்த அந்த இளைஞன் மனம் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஆனாலும் அவன் இடிந்து போய் உட்கார்ந்து விடவில்லை. விதி கொடுமையானது என்று புலம்பிக் கொண்டு செயலற்று இருந்து விடவில்லை. தன்னுடைய வாழ்விற்குத் தானே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும், எது முடிகிறதோ அதை சிறப்பாகச் செய்து வாழ்வைத் தொடர வேண்டும் என்று எண்ணிய அந்த இளைஞன் மைசூரிலேயே உள்ள ஒரு கல்லூரியில் பொறியியல் வல்லுனர் பட்டப் படிப்பு பெற்றார். சிறு சிறு வேலைகள் செய்து கொண்டே 1967ல் அந்தப்பட்டப் படிப்பையும், 1969ல் கான்பூரில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றான் அந்த இளைஞன். எழுபதுகளில் கணினி(கம்ப்யூட்டர்) என்ற அபூர்வ இயந்திரம் இந்தியாவிலும் அடியெடுத்து வைத்தது. அந்தக் காலக் கட்டத்தில் பெரிய பெரிய நிறுவனங்களிலும், சில அரசாங்கத் துறைகளிலும் மட்டுமே கணினிகள் பயன்படுத்தப்பட்டன. அந்த இளைஞன் "பத்னி கம்ப்யூட்டர்ஸ்" என்ற நிறுவனத்தில் 1977ல் பொது மேலாளராகச் சேர்ந்தான். அப்போது கணினிகளின் நுணுக்கத்தை அறிந்து வர அந்த இளைஞனை அந்த நிறுவனம் அமெரிக்காவுக்கு அனுப்பியது.

பட்டப்படிப்பு காலங்களில் கூட வேலைகள் செய்து கொண்டு பணத்தோடு அறிவையும் சேர்த்துக் கொள்ளும் பழக்கத்தைப் பெற்றிருந்த அந்த இளைஞனுக்கு அந்தப் பயணம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அமெரிக்காவில் கணினிகள் பற்றி முழுவதுமாக அறிந்து வந்த அந்த இளைஞன் எதிர்காலத்தில் கணினிகளின் தாக்கம் இந்தியாவிலும் கண்டிப்பாக அதிகமாகவே இருக்கும் என்பதைக் கணித்தான். கணினிகளின் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றைத் தானே ஆரம்பிக்க எண்ணினான். சேமிப்பு ரூபாய் பத்தாயிரம் மட்டுமே கையில் இருந்தது.

அப்போது அவனுக்கு திருமணமும் ஆகியிருந்தது. மனைவியும் படித்து நல்ல உத்தியோகத்தில் இருந்தவள். அவளிடம் அவன் ஆலோசனை கேட்ட போது நல்ல சம்பளம் உள்ள வேலையை விட்டு விட்டு சேமிப்பை எல்லாம் போட்டு ஒரு புதிய முயற்சியில் ஈடுபடுவது புத்திசாலித்தனமல்ல என்று சொன்னாள். நடைமுறைக்கு ஏற்ற நல்ல அறிவுரையாக அது இருந்த போதும் எதிர்காலத்தில் கணினிகள் ஆதிக்கம் கண்டிப்பாக அதிகம் இருக்கும் என்று கணக்குப் போட்ட அந்த இளைஞன் துணிவுடன் தன் மனைவியின் துணையுடனும், தன் நண்பர்கள் சிலர் துணையுடனும் ஒரு புதிய நிறுவனம் ஆரம்பித்தான். புனேயில் 7-7-1981ல் ஒரு சிறிய வீட்டில் ஆரம்பிக்கப்பட்ட அந்த நிறுவனம் இன்று உலக நாடுகளில் எல்லாம் கிளைகள் கொண்ட பிரம்மாண்டமான நிறுவனமாக கோலோச்சி நிற்கின்றது. அந்த நிறுவனம் இன்போசிஸ். அந்த இளைஞன் நாராயணமூர்த்தி.

ஐஐடியில் பட்டப்படிப்பு என்ற ஒரு கனவு கலைந்த போது அவர் தன்னை அதிர்ஷ்டமில்லாதவனாக முத்திரை குத்திக் கொள்ளவில்லை. என்ன செய்தாலும் நமக்கு வாய்ப்பதென்னவோ இவ்வளவு தான் என்று முயற்சிகளை அவர் குறைத்துக் கொள்ளவில்லை. ஒரு கதவை மூடும் இறைவன் அதை விடச் சிறந்த இன்னொரு கதவைத் திறந்து விடக்கூடும். சில கடினமான சூழ்நிலைகள் நம்மைப் பதப்படுத்தவே ஏற்படவும் கூடும். அதற்கெல்லாம் தயாராக இருந்து செயல்படுகிற மனிதனே காலப்போக்கில் வெற்றியடைகிறான் என்பதற்கு நாராயணமூர்த்தி ஒரு நல்ல உதாரணம்.

இறைவன் ஆலமரத்தை பெரியதாக வளர்ந்த மரமாகவே கொண்டு வந்து நட்டு விடுவதில்லை. ஒரு விதையாக உருவாகும் அது ஓர் பெரிய ஆலமரமாக வேண்டுமென்றால் கிடைக்கின்ற காற்று, நீர், பூமியின் சத்துக்கள் எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். காலத்தோடு பொறுமையாகச் செயல்படவும் காத்திருக்கவும் அறிந்திருக்க வேண்டும். அது ஒரு நாள் மரமாகலாம். சில காலம் கழித்து காடே ஆகலாம். ஆனால் அதன் ஆரம்பம் மிகச் சிறிய விதை தான். அது அந்த நிலையில் தாழ்வு மனப்பான்மை கொண்டு விட்டால், சலிப்படைந்து விட்டால் மரமாகும் வாய்ப்பையும், காடாகும் வாய்ப்பையும் என்றுமே இழக்க நேரிடும்.

அறிவு கூர்மையும், உழைக்கும் உறுதியும் இருந்து விட்டால் கூட காணும் கனவு நனவாக முடியும் என்கிற கட்டாயமில்லை. விதியின் ஒத்துழைப்பும் தேவை தான். ஆனால் விதி ஒத்துழைக்காத போதும் மன உறுதியை இழந்து விடாமல் முன்னேறும் மனிதனை மெச்சி அதே விதி அவனுக்கு உதவத் தீர்மானிக்கிறது. எனவே இளைஞர்களே, உங்களுடைய ஓரிரு கனவுகள் கலையக்கூடும். எல்லாக் கனவுகளும் கைகூடும் மனிதர்கள் இது வரை பூமியில் வாழ்ந்ததில்லை. நாம் இன்று போற்றி பிரமிக்கும் எத்தனையோ பெரிய மனிதர்கள் கூட நினைத்தபடியெல்லாம் இருக்க முடிந்ததில்லை. அதை நினைவில் வையுங்கள். கனவு கலைந்தாலும், மனம் கலையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள்ளும் ஒரு நாராயணமூர்த்தி இருக்கலாம். நீங்களும் காடுகளை உருவாக்கும் விதையாக இருக்கலாம். அந்த சாத்தியக்கூறை கௌரவியுங்கள். நம்பிக்கையும், விடாமுயற்சியும் இருக்குமானால் நீங்களும் நிறைய சாதிப்பீர்கள். சிகரங்களை எட்டுவீர்கள்!

எண்ணங்கள் பிரம்மாக்கள்

எல்லா செயல்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் மூல விதை எண்ணங்களே. எண்ணங்கள் இல்லாமல் செயல்கள் இல்லை. நிகழ்ச்சிகள் இல்லை. நம்மைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு பொருளும் யாரோ ஒருவர் எண்ணத்தில் கருவாகி பின்னால் உருவாகியது தான். ஒவ்வொருவரின் வெற்றிக்கும், தோல்விக்கும் அவரவர் எண்ணங்களே மிக முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

இதைப் பெரும்பாலோருக்கு ஏற்க கடினமாக இருக்கலாம். நான் தோல்வி அடைய வேண்டும் என்று எண்ணுவேனா, நான் கஷ்டப்பட வேண்டும் என்று எண்ணுவேனா? பின் எதனால் எனக்குத் தோல்வி வந்தது? எதனால் கஷ்டம் வந்தது? என்று கேட்கலாம். கேட்பது நியாயமாகக் கூட நமக்குத் தோன்றலாம். ஆனால் ஆராய்ந்து பார்த்தால் தான் உண்மை விளங்கும்.

உதாரணத்திற்கு எனக்குத் தெரிந்த ஒரு மனிதரைச் சொல்லலாம். அவர் வியாபாரத்தில் பெரிய வெற்றியடைய வேண்டும் என்பதே தனக்கு லட்சியம் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார். தந்தையின் சொத்தில் ஒரு நல்ல தொகை அவருக்குக் கிடைத்து அதை மூலதனமாகப் போட்டு அவர் வியாபாரம் ஆரம்பித்தார். காலையில் ஏழரை மணிவாக்கில் தான் எழுந்திருப்பார். அரை மணி நேரம் செய்தித்தாள் படிப்பார். பத்து மணிக்குத் தான் கடையைத் திறப்பார். மதியம் ஒன்றரை மணிக்கு வீட்டுக்கு வந்தாரானால் சாப்பிட்டு விட்டுத் தூங்கி எழுந்து மறுபடி ஐந்து மணிக்குத் தான் கடைக்கு செல்வார். எட்டரை மணிக்கு கடையை மூடி விட்டு வீடு திரும்புவார். அவருடைய போட்டியாளர்கள் எல்லாம் காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்பது மணி வரை மதியம் அரை மணி சாப்பாட்டு நேரம் தவிர கடையில் இருந்து வியாபாரம் செய்தார்கள்.

அதைச் சிலர் சுட்டிக்காட்டிய போது அவரோ “மதியம் சற்று தூங்கினால் ஒழிய எனக்கு உடல் ஒத்துக் கொள்கிறதில்லை. அந்த மதிய நேரத்தில் பெரிதாக என்ன வியாபாரம் ஆகி விடப்போகிறது” என்று சொன்னார். எட்டரை மணிக்கு கிளம்பி வருவது ஏன் என்று ஒருவர் கேட்ட போது “ஒன்பது மணி சீரியல் ஒன்று டிவியில் நன்றாக இருக்கிறது. எனவே எட்டரைக்குக் கிளம்பினால் தான் சரியாக அதைப் பார்க்க சரியாக இருக்கிறது” என்றார். வியாபாரத்தில் சிலர் அவருக்கு சற்று மரியாதை குறைவாகக் கொடுப்பது போல் தோன்றினாலும் அவரிடம் வியாபாரம் செய்வதை நிறுத்தி விடுவார். அவர் வியாபாரத்தில் படுநஷ்டம் ஏற்பட்டது என்பதை கூறத் தேவையில்லை.

வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது உண்மையாக இருக்கலாம். ஆனால் மதிய நேரம் மூன்று மணி நேரமாவது தூங்க வேண்டும் என்ற எண்ணமும், இரவு ஒன்பது மணி சீரியலைப் பார்த்தே தீர வேண்டும் என்ற எண்ணமும், நல்ல மரியாதை தனக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணமும் வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணத்தையும் விட பல மடங்கு வலிமையாக ஆணித்தரமாக அவரிடம் இருந்தன. அந்த பலமான, ஆணித்தரமான எண்ணங்கள் செயல்களாகின. தூங்க முடிந்தது. சீரியல் பார்க்க முடிந்தது. மரியாதை தருபவர்களுடன் மட்டுமே வியாபாரம் செய்ய முடிந்தது. வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணத்தை விட வெற்றிக்கு எதிர்மறையான எண்ணங்கள் வலிமையாக இருந்ததால் வெற்றி மட்டும் கிடைக்கவில்லை.

எனவே வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அதிகம் இருந்தும் எனக்கு வெற்றியே கிடைக்கவில்லை என்று யாராவது சொன்னால் அவர் வெற்றி பற்றிய எண்ணத்தோடு கூட இருக்கும் மற்ற எண்ணங்களையும் பரிசோதித்துப் பார்ப்பது நல்லது.

வாய் விட்டுச் சொல்லும் எண்ணங்கள் தான் முக்கியமானது என்றில்லை. பெரும்பாலான நேரங்களில் வாய் விட்டுச் சொல்லாத, வார்த்தையாகாத எண்ணங்கள் நம்முள்ளே வலிமையாக இருக்குமானால் அந்த வலிமையான எண்ணங்கள் தான் செயல்களாகும். மேலே சொன்ன உதாரணத்தில் தோல்வியடைய வேண்டும் என்பது அவரது எண்ணமாயில்லை என்றாலும் தோல்விக்கு இட்டுச் செல்கின்ற எண்ணங்கள் அவரிடம் வலிமையாக இருந்ததால் தோல்வி நிஜமாகியது.

ஒரு முறை எண்ணிய உடனேயே அந்த எண்ணம் சக்தி படைத்ததாக மாறி விடுவதில்லை. ஒரு எண்ணம் திரும்பத் திரும்ப எண்ணப்படும் போது அது சக்தி பெற ஆரம்பிக்கிறது. அந்த சக்தி அதை செயல்படுத்தத் தூண்டுகிறது. அதே எண்ணங்கள் கொண்டவர்களை தன் பக்கம் ஈர்க்கிறது. மேலும் வலுப்பெறுகிறது. அது அலைகளாகப் பலரையும் பாதிக்கிறது. பலரையும் செயலுக்குத் தூண்டுகிறது. அந்த எண்ணம் வலிமையானதாக இருந்தால் அது தனி மனிதர்களை மட்டுமல்ல, ஒரு சமூகத்தையே மாற்றலாம், நாட்டையே மாற்றலாம்.

சூரியன் அஸ்தமிக்காத பேரரசாகத் திகழ்ந்த ஆங்கிலேயர் ஆட்சியை கத்தியின்றி, இரத்தமின்றி போராடி இந்தியாவை விட்டு விரட்ட முடியும் என்ற எண்ணம் மகாத்மா காந்தியிடம் இருந்தது. எண்ண அளவிலே அது நகைப்பிற்கு இடமளிப்பதாகவே தோன்றினாலும் அந்த எண்ணத்தின் வலிமை இந்திய தேசத்தின் சரித்திரத்தையே பின்னாளில் மாற்றியமைத்ததை நாம் அறிவோம். அந்த எண்ணத்தின் வீரியம் எண்ணற்ற மனிதர்களைத் தொட முடிந்ததும், அந்த மனிதர்களை மாற்ற முடிந்ததும், சுதந்திரப் போராட்ட பேரலையை இந்தியாவில் உருவாக்க முடிந்ததும் வரலாறு அல்லவா? ஆங்கிலேய சூரியன் இந்திய மண்ணை விட்டு மறைந்தது சரித்திரம் அல்லவா?

ஒவ்வொரு புரட்சிக்குப் பின்னும், ஒவ்வொரு பெரிய மாற்றத்திற்குப் பின்னும், வலிமை வாய்ந்த எண்ணங்கள் ஆரம்பங்களாக இருந்திருக்கின்றன. வரலாற்றின் மாற்றத்திற்கே விதைகள் எண்ணங்களாக இருக்கின்றன என்றால் தனி மனித மாற்றத்திற்கு எண்ணங்கள் எந்த அளவு முக்கியம் என்பதை சொல்லத் தேவையில்லை.

நான் அதிர்ஷ்டமில்லாதவன் என்கிற எண்ணமே அடிக்கடி ஒருவர் மனதில் எழுமானால் அதற்கான ஆயிரம் நிரூபணங்களை அந்த எண்ணம் அவர் வாழ்வில் ஏற்படுத்திக் கொடுக்கும். என்னால் முடியும் என்ற உறுதியான எண்ணமே எப்போதும் ஒருவர் மனதில் மேலோங்கி நின்றால் அந்த எண்ணம் உண்மையில் அந்தக் காரியத்தை கண்டிப்பாக முடித்துக் காட்டும்.

எண்ணங்கள் பிரம்மாக்கள். அவை எண்ணியதை உருவாக்கும் சக்தி படைத்தவை. ஒரு எண்ணம் செயலாக முடியாமல் போகிறதென்றால் அதை விட சக்தி வாய்ந்த வேறொரு எண்ணம் அதனுடனேயே இருந்து போராடி அதனைப் பலமிழக்க வைத்திருக்கிறது என்று பொருள். எனவே உங்கள் மனதில் அதிகமாக மேலோங்கி நிற்கும் எண்ணங்கள் எத்தகையவை என்பதை அடிக்கடி சோதித்துப் பாருங்கள். அவை இன்று உங்களை இந்த நிலைக்குக் கொண்டு சேர்த்த பெருமை உடையவை. உங்களுடைய இன்றைய நிலை திருப்திகரமாக இல்லையென்றால் முதலில் உங்கள் எண்ணங்களை மாற்றுங்கள். எண்ணங்கள் மாறுகிற போது அதற்கேற்ப எல்லாமே மாறும். இது மாறாத உண்மை.

செக்குமாடாய் உழைக்காதீர்கள்

வாழ்க்கையில் உயர வேண்டுமானால் உழைப்பு மிக அவசியம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் கடுமையாக உழைப்பது மட்டுமே உயர்வுக்கு உத்திரவாதமாகுமா என்றால் இல்லை என்பதே உண்மை. எவ்வளவோ பாடுபட்டு உழைப்பவர்களை நாம் பார்த்திருக்கிறோம். பலர் எத்தனை காலமாக அப்படி உழைத்தாலும் துவக்கத்தில் இருந்தது போலவே பலகால உழைப்பிற்குப் பின்பும் இருக்கிறார்கள். உழைப்பு உயர்வுக்கு உத்திரவாதமென்றால் அவர்கள் எத்தனையோ உயர்ந்திருக்க வேண்டுமே, ஏன் அவர்கள் அவ்வாறு உயரவில்லை? காரணம் அவர்கள் செக்கு மாடாகத் தான் உழைத்திருக்கிறார்கள்.
செக்குமாடு ஒரு நாள் நடக்கும் தூரத்தைக் கணக்கிட்டால் அது மைல் கணக்கில் இருக்கும். ஆனால் அது ஒரே இடத்தில் தானே சுற்றி நடக்கிறது. அப்படித்தான் பலருடைய உழைப்பும் இருக்கிறது. இந்த செக்குமாடு உழைப்பில் சிந்தனை இல்லை. நாளுக்கு நாள் வித்தியாசம் இல்லை. புதியதாய் முயற்சிகள் இல்லை. மாற்று வழிகள் குறித்த பிரக்ஞை இல்லை. இது போன்ற உழைப்பு உங்கள் நாட்களை நகர்த்தலாம், ஆனால் வாழ்க்கையை நகர்த்தாது.

நாளுக்கு நாள் உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது. புதிது புதிதாகத் தேவைகள் உருவாகின்றன. பழைய சூழ்நிலைகள் மாறி புதிய சூழ்நிலைகள் உருவாகின்றன. உங்கள் தொழிலைத் தீர்மானிக்கும் மனிதர்கள் மாறுகிறார்கள். நேற்று வெற்றியை ஏற்படுத்திய வழிமுறைகள் இன்று அதே விளைவுகளை ஏற்படுத்தத் தவறுகின்றன. இப்படிப்பட்ட நேரத்திலும் ஒரே போல் எப்போதும் கண்களை மூடிக் கொண்டு உழைப்பது தான் செக்குமாட்டின் உழைப்பு. இப்படி உழைத்து விட்டு உயரவில்லையே என்று வருத்தப்படுவதில் பயனில்லை.

உயர வைக்கும் உழைப்பு எப்படி இருக்க வேண்டும்?

*செய்யும் செயல் நமது அறிவுக்கும் திறமைக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும்.

*என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம், கிடைக்கக்கூடிய பலன் என்ன, அது உழைப்பிற்குப் போதுமானது தானா என்பதை எப்போதும் தெளிவாக அறிந்திருங்கள்.

*நாம் செயல்புரிகிற விதம் கச்சிதமானது தானா, மற்றவர்கள் எப்படிச் செய்கிறார்கள், நம்மை விட அவர்கள் செயல்புரிகிற விதம் சிறந்ததாக உள்ளதா என்பதை விருப்பு வெறுப்பில்லாமல் பார்க்க வேண்டும். அப்படி நம்மை விடச் சிறப்பாக இருந்தால் அதைப் பின்பற்றத் தயங்கக்கூடாது. நம்முடைய வழிமுறை என்பதற்காக தரம் குறைந்த ஒன்றை கண்ணைமூடிப் பின்பற்றும் முட்டாள்தனத்தை செய்யக்கூடாது.

*செய்யும் செயலில் ஈடுபாடும், முழுக் கவனமும் இருக்க வேண்டும். செய்யச் செய்ய செயலில் நாளுக்கு நாள் மெருகு கூடா விட்டால், தரம் உயரா விட்டால், செயலைக் கச்சிதமாகச் செய்து முடிக்கும் நேரம் கணிசமாகக் குறையா விட்டால் நமக்குள்ள ஈடுபாட்டிலோ, கவனத்திலோ குறை உள்ளது என்பது பொருள்.

*நம் தொழில் சம்பந்தமாக புதிது புதிதாக வரும் மாற்றங்களை கண்டிப்பாக கவனித்து வர வேண்டும்.

*சரியாகச் செய்தும், முயன்றும் போதிய பலன் தராத தொழிலை விட்டுவிடத் தெரிய வேண்டும். 'செண்டிமெண்டல்' காரணங்களுக்காக அதைத் தொடர்ந்து செய்வது முட்டாள்தனம்.

*இதை விட்டால் வேறு வழியில்லை, இது தான் எனக்கு விதித்திருக்கிறது, இதைத் தவிர வேறு எதற்கும் லாயக்கற்றவன் என்று நம்மை நாமே மட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாது. புதியதை முயன்று பார்க்கத் தயங்கக்கூடாது. முயன்று பார்த்தால் ஒழிய நம் உள்ளே உள்ள திறமைகளை நாம் அறிய முடியாது.

இப்படி எல்லா அம்சங்களையும் உள்ளில் கொண்டு உழைக்கும் உழைப்பே உயர்வைத் தரும்.

Monday, 28 June 2010

Puzzle-2

U
Have
7 Sticks
"| | | | | | |". . .

Make
It
Twenty Four
Without
Bending Or Breaking Them. . . !


Puzzle-1

One chocolate cost one rupee, on returning of three empty chocolate covers you will get one chocolate, now you have fifteen rupees how many chocolates you will get ?






இக்கணத்தில் வாழு

     கி.மு.563‍ல் நேபாள நாட்டின் கபிலவாஸ்துவில், அரசன் சுத்தாதனனுக்கும் அரசி மாயாவதிக்கும் கெகௗதமன் மகனாகப் பிறந்தேபாதே, ஜோதிடர்கள், ‘இவன் அரசனாக அல்லது ஆன்மிக குருவாக உலைகயே ஆட்சி புரிவான்என
எதிர்காலத்தைக் கணித்துவிட்டார்கள். மகன் பேரரசனாக வேண்டும் என்பதற்காக அரண்மனைக்கு உள்ளேயே எல்லாக் கலைகளையும் கற்றுக் கொடுத்தான் சுத்தாதனன். 16 வயதிலேயே திருமணமும் முடித்து வைத்தான். திகட்டத் திகட்ட இன்பம் அனுபவித்த சித்தார்த்தனுக்கு, ஒரே ஒருநாள் கிடைத்த வெளியுலக தரிசனம் அகக் கண்களை திறந்துவிட்டது. அரண்மனைபதவி, செல்வாக்கு, புகழ், உணவு, உறக்கம், மனைவி, மகன், பணியாட்கள் என அத்தைனயும் உதறித் தள்ளி, வெளியேறினான் சித்தார்த்தன்.

     துன்பங்கள் நிறைந்த வாழ்வில் இருந்து மனிதர்கள் விடுபட்டு, இன்பமாக வாழேவண்டும் என்பதற்கான வழிதேடி, அரண்மைனையவிட்டு சித்தார்த்தன் வெளியேறியபோது அவனுக்கு வயது 29. முதலில், யோக மந்திரமுறைகைள முழுமூச்சுடன் கற்று, தேடிப் பார்த்தான்தேடிய விடை கிடைக்கவில்லை. அடுத்ததாக, உணவுஉறக்கம், ஓய்வு என எல்லாவற்றையும் துறந்து, உடலை வருத்தி தீவிர தியானத்தில் ஆழ்ந்தான். கிட்டத்தட்ட மரணத்தின் வாசைலத் தொட்டேபாதுதான், தன் தேடலுக்கான விடை, தியானத்திலும் இல்லை எனக் கண்டுகொண்டான்தன் ஆறு வருட கால தியானத் தேடல் வீணாகிப்போனதே என்ற எண்ணத்தில் இருந்தபோது, பணிப் பெண் பால்சோறு கொண்டுவந்தாள். மிக நீண்ட நாட்கள் கழித்து உணைவ அனுபவித்துச் சாப்பிட்டேபாது, சித்தார்த்தன் மனதில் ஒரு மின்னல் மின்னியது. தன் தேடலுக்கான விடை கிடைத்ததுபோல் இருந்தது.

      உடேன, அரண்மைனைய விட்டுக் கிளம்பிப் போய், போதி மரத்தடியில் அமர்ந்தான்இத்தைன நாட்களாக வெளியில் தேடிக்கொண்டு இருந்த விடையை தனக்குள் தேடத் தொடங்கினான். 49 நாட்கள் கடந்து ஒரு பொளர்ணமி தினத்தில் தேடலுக்கு விடை கிடைத்தது. மனிதகுலம் முழுவதுக்கும் இன்பம் தரக்கூடிய மந்திரச் சொல் ‘இக்கணத்தில் வாழுஎன்பதாக உதித்தது.

      35-வது வயதில் தன்னுடைய ஐந்தே ஐந்து சீடர்களுக்கு மட்டும், தான் கண்டுணர்ந்த உண்மைகளை சாரநாத்மான் பூங்காவில் அறிவித்தார் புத்தர். ‘‘மனித வாழ்வு என்பது இன்பம், துன்பம் இரண்டும் கலந்தது. ஆசையே துன்பத்துக்குக் காரணம். வாழ்வு சுலபமாக இருக்க வேண்டுமானால் சரியான சிந்தனை, சரியான புரிதல், சரியான பேச்சு, சரியான நடவடிக்கை, சரியான வாழ்வுமுறை, சரியான முயற்சி, சரியான பராமரிப்பு மற்றும் சரியான செயல்பாடு ஆகியவை வேண்டும்மனிதர்கள் நேற்றைய பயத்தினால், நாளைய வாழ்வை எண்ணி நடுங்குகிறார்கள்.

    நேற்று நடந்தவற்றை உங்களால் மாற்ற முடியாது, நாளை நடப்பைதத் தடுக்க முடியாது. இன்றய பொழுதில், இக்கணத்தில் வாழுங்கள்! அதுதான் எல்லா துன்பங்களுக்கும் ஒரே தீர்வு!’’ என்றார் புத்த பெருமான்.
    அவரது 80-வது வயதில், இரும்புக் கொல்லன் ஒருவன் ஆசையோடு கொடுத்த காளான் உணவைச் சாப்பிட்டதும், அதை உடம்பு ஏற்கவில்லை என்பைதயும், உயிர் பிரியும் நேரம் வந்துவிட்டது என்பைதயும் உணர்ந்துகொண்ட புத்தர், தம் பிரதம சீடர் ஆனந்தைனைஅழைத்து, மரத்தின் கீழே படுக்கை விரிக்கச் சொல்லி, நீட்டி நிமிர்ந்து படுத்து, ‘‘ஆனந்தா, இப்போது நான் மரண கணத்தில் வாழப்போகிறேன்’’என்று புன்னைகேயாடு சொல்லிவிட்டு, அமைதியாக உயிர் துறந்தார்.

     வாழ்வின் எல்லா துன்பங்களையும் தீர்த்து, புது வழி காட்டும் அவரது இக்கணத்தில் வாழுஎன்னும் மந்திரச் சொல்லின் மகத்துவம், வாழ்வின் ஒளிவிளக்காக மனிதர்களுக்குக் காலெமல்லாம் வழிகாட்டிக் கொண்டே இருக்கும்.