Friday, 20 July 2012

துணிவே துணை!

துணிவே துணை!
காசிக்கு ஒருமுறை பயணம் மேற்கொண்டிருந்தார் விவேகானந்தர். கோயிலுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது குரங்குக் கூட்டம் ஒன்று விவேகானந்தரைத் துரத்தியது. தற்காத்துக் கொள்ள அச்சத்தில் விவேகானந்தர் ஓட ஆரம்பித்தார். குரங்குகள் விவேகானந்தரை விடாமல் துரத்தியது. என்று குரங்குக் கூட்டத்திட மிருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியவில்லை. உடனே மனதில் "பயப்படாதே! எதிர்த்து நில்!' என்று குருதேவரின் குரல் ஒலித்தது.
விவேகானந்தர் துணிவு வந்தவராய் குரங்குகள் பக்கம் திரும்பி எதிர்த்து நின்றார். குரங்குகள் ஒரு விநாடி திகைப்போடு நின்றன. குரங்குகளை இன்னும் தீர்க்கமாகப் பார்த்தார். விவேகானந்தரின் பார்வையில் பயந்து போன குரங்குகள் மிரண்டு போய் திரும்பி ஓட ஆரம்பித்தன.
""எதையும் துணிவோடு எதிர்கொண்டால் துக்கமில்லை என்பதை நான் அந்தக் குரங்குகளிடமிருந்து கற்றுக் கொண்டேன்!'' என்று குறிப்பிட்டுள்ளார் விவேகானந்தர்.

Wednesday, 18 July 2012

வாழ்க்கையில் வெற்றி பெறுவது மிகவும் சுலபம் தான்

வாழ்க்கையில் வெற்றி பெறுவது மிகவும் சுலபம் தான்.. அதற்காக நாம் கொஞ்சம் முயற்சி செய்யனும்..
  • நாம் செய்கின்ற வேலையினை அதிக படுத்துங்க.. எல்லோரையும் விட இரண்டு மடங்கு அதிகமாக உழைக்கவும்.
  • மனதிர்க்கு இதமான வேலைகளை சோம்பலின்றித் தொடர்ந்து செய்யுங்கள்.
  • உங்களுக்கு யாரவது செய்த சின்ன உதவியாக இருந்தாலும் நன்றி சொல்ல மறக்காதிங்க.
  • நல்ல விஷயங்கள் யாரு சொன்னாலும் ஏற்றுக்கொள்ளுங்க.
  • குடும்பத்தில் அனைவருடன் கலந்து பேசி நல்ல முடிவினை எடுங்க. அன்புக்கு கட்டுபடுங்க.
  • துயரத்தில் இருக்கும் மனிதர்களை ஆறுதல் வார்த்தைகள் சொல்லி அன்பு காட்டுங்க.
  • யாரையும் பாராட்டும் பொழுது வாயளவில் பாராட்டாமல் மனதளவில் பாராட்டுங்கள்.
இதை நாம் முறையாக கடைபிடித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறுவது மிக சுலபமாகிவிடும்.