Monday, 24 May 2010

Beauty Tips

அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, 2 டீஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன், ஒரு டீஸ்பூன் கடலை மாவை சேர்த்து முகத்தில் பூசி, 15 நிமிடம் கழித்து மிதமான சுடுநீரில் கழுவுங்கள்.

2 டீஸ்பூன் பார்லி பவுடருடன் அரை டீஸ்பூன் முல்தானிமட்டி, ஒரு டீஸ்பூன் பாதாம் ஆயில் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து மிதமான சுடுநீரில் கழுவுங்கள்.

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சைச் சாறை தலா 2 டீஸ்பூன் எடுத்து, கெட்டியான தயிர் விட்டு பேஸ்ட்டாக்கி, முகத்தில் பூசி காய்ந்தபின் கழுவுங்கள்.

இந்த மூன்று முறைகளையும் ஒன்று மாற்றி ஒன்று செய்து கொள்ளும்போது, எந்த பக்கவிளைகளும் இல்லாமல், அன்றலர்ந்த தாமரையாக என்றைக்கும் உங்கள் முகம் ஜொலித்துக் கொண்டே இருக்கும்

Saturday, 15 May 2010

Believing In Yourself

Limitations can either define us or give us a challenge to outwit. When you look at your abilities, do you see boundaries and limits, or do you see possibilities and potential? Obsessing about weaknesses can blind us to the untapped abilities we already have. You have talent. Everyone does. The secret to success is to find that talent, develop it and push it as far as you can. Grandma Moses might have been a lousy bowler, Einstein probably couldn't sing a lick, Michelangelo could've been unable to speak well in public. So what? They knew what they were good at and rode that pony. Your talent might be right in front of you: where do you get the most compliments? What seems to come easily to you? What do people ask your advice for? Live there. Don't let the rest get in the way.

Thursday, 13 May 2010

பயம்

             நூற்றில், தொண்ணூறு பேருக்கு மேடை ஏறிப் பேசுவதில் பயம் இருக்கிறதாம்.இப்படி நம் எல்லோருக்குமே ஏதோ ஒரு விஷயம் குறித்துப் பயம் இருக்கும். சிலருக்கு, உயரம் பயம். சிலருக்கு, இருட்டு பயம். சிலருக்கு, தண்ணீர் பயம். சிலருக்கு, பேய், பூதம் பயம். சிலர் டூ விலரின் பின் சீட்டில் அமர்ந்துகொண்டு, 'பார்த்துப் போ... மெதுவாகப் போ' எனப் பயமுறுத்திக் கொண்டே இருப்பார்கள்.நாளை காலை உயிரோடு இருப்பேனா என்று பயந்தவாறே படுக்கைக்குச் செல்ப வர்கள் உண்டு. நிறையப் பணம் இருந் தும், தேவைகள் இருந்தும், விமானத்தில் பறக்கப் பயப்படுபவர்கள் உண்டு. பழைய கட்டடம், இருட்டு அறை, மலைப் பயணம் என எல்லோருக்கும் ஏதோ ஒரு பயம்!

வெளியில் இருந்து ஏதோ ஒன்று நம்மைப் பயமுறுத்துகிறது  என்று நினைக் கிறோம். உண்மையில், பயம் நமக்குள்தான் இருக்கிறது.ஒரு சின்ன விஷயமாக இருக்கும், அப்பாவிடம் பர்மிஷன் கேட்பது, கோபமாக இருக்கிற ஆசிரியரைச் சந்திப்பது, தன்னைப்பற்றி தவறாகப் பேசிய நண்பனை எதிர்கொள்வது என வாழ்க்கையின் மிகச் சாதாரண விஷயங்கள் அனைத்தையும் 'அப்புறம் பார்த்துக்கலாம்' என தள்ளிப்போடுவதுதான் மனதுக்குள் பயம் தங்க ஆரம் பிப்பதன் முதல் படி.
          இந்த விஷயத்துக்கு 'அவர் என்ன சொல்வாரோ? அதனால், அப்புறம் பேசலாம்' எனத் தள்ளிப்போடுவது எளிதான உத்தி யாகத் தெரிந்தாலும், மனசுக்குள் ஆழமாக அந்த விஷயம் அரித்துக்கொண்டே போய் பயமாக மாறி நிற்கும்.அந்தக் குறிப்பிட்ட விஷயத்தை மறந்து விட்டதுபோல உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டாலும் அந்த தள்ளிப்போடல் நடவடிக்கை மனசுக்குள் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. அப்படி இருக்குமோ, இப்படி இருக்குமோ என்று ஆயிரம் கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கிறது.
 அநேகமாக, அந்த விஷயத்தை நீங்கள் எதிர்கொண்டால், அது மிகச் சாதாரணமாக முடியவும் வாய்ப்பு உண்டு. 'இதுக்குப் போயா இப்படிப் பயந்துகிடந்தோம்' என்று சிரிப்பு வரலாம். 'எந்த விஷயத்தையும் நாம் பயத்தின் காரணமாக எதிர்கொள்ளத் தயங் குவது இல்லை. எதிர்கொள்ளத் தயங்கு வதால்தான் பயம் வருகிறது.'
           ஓர் ஆங்கில அறிஞர், 'உங்கள் எதிரி புதர்களுக்குள் ஒளிந்திருக்கவில்லை.  உங்க ளைத் தாக்குவதற்காக மலைப் பகுதிகளில் பதுங்கி இருக்கவில்லை. அது, பயம் என்ற பெயரில் உங்கள் மனதுக்குள் உட்கார்ந்து இருக்கிறது. எதிரியை உங்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டு உயர உயர எப்படிப் போவது?
         உளவியலாளர்கள் ஒரு நல்ல பயிற்சியைச் சொல்கிறார்கள்... உங்களை எது பயமுறுத்துகிறதோ அதைப் பயப்படாமல் செய்யுங்கள். அதைச் செய்கிறபோது, 'இந்த விஷயத்தைச் செய்வதில் எனக்குப் பயம் உண்டு. ஆனாலும், அதைச் செய்கிறேன்' என்று சொல்லிக் கொண்டே செய்யுங்கள். மொத்தத்தில் உங்களைப் பயமுறுத்துவதாக நினைக்கும் எந்த விஷயத்தையும் மனசுக்குள் பதியவிடாதீர்கள்.
         பயத்துக்கு எதிரான நம் வாழ்க்கைப் பயிற்சி எந்த விஷயத்தையும் எளிதாக்கிவிடும். கார் ஓட்ட ஆரம்பிக்கிறபோது, அல்லது புதிதாக பைக் ஓட்டும்போது, கிளட்ச்சைப் பாதியும் பிரேக்கைப் பாதியும் பிடித்துக்கொண்டே வண்டி ஓட்டுவோம். திடீரென யாராவது குறுக்கே வந்தால், கால்கள் பரபரக்கும். வேகமாக பிரேக்கை மிதிப்போம். சில நேரம் பிரேக்குக்குப் பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்துவோம். கண்களை அகலமாக விரித்து வைத்துக் கொண்டு பயந்தபடியே வண்டியில் பயணிப்போம்.இந்தப் போராட்டங்களுக்குப் பயந்து, 'இதெல்லாம் நமக்குச் சரிப்படாதுப்பா' என்று கார் ஓட்டுவதைத் தவிர்த்தவர்கள்கூட உண்டு. ஆனால், ஆரம்பத்தில் பயந்து பயந்து பிரேக் அழுத்தி, கிளட்ச் பிடித்து, கியர் மாற்றி நாம் செய்த விஷயங்கள், பிறகு மிகச் சாதாரணமாகும். கொஞ்சம் பழகிய பிறகு, மனசுக்குள் தங்கியிருந்த பயம் வெளியேறிவிடும்.
          எந்த ஒரு விஷயத்தையும் எதிர்கொள்ள ஆரம்பிக்கிறபோது, பயத்தை நாம் கையாளுகிறோம். அது நம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எதிர் கொள்ளவும் அணுகவும் தயங்கித் தயங்கி நின்றால், பயம் நம்மைக் கையாள ஆரம்பிக்கிறது. உதைத்து விளையாடுகிறது.
         நிர்வாகவியல் கருத்தரங்குகளில் பயம்பற்றியும் அதன் தன்மை குறித்தும் ஒரு விளக்கம் சொல்வார்கள். 'மீன் தொட்டியில் தாக்கும் குணம்கொண்ட கில்லர் வகையறா மீனையும், சாதுவான மீனையும் போடுவார்கள். இவை இரண்டுக்கும் நடுவே ஒரு கண்ணாடித் தகடைச் செருகிவைப்பார்களாம்.
ஒவ்வொரு முறை அந்தச் சாதுவான மீன் கடந்துபோகும்போதும் இந்த கில்லர் மீன் அதைப் பிடிக்க வேகமாக முன்னேறும். குறுக்கே கண்ணாடித் தடுப்பு இருப்பதால், அதன் முன்பகுதியில் அடிபட்டு கில்லர் பிஷ்ஷைத் திருப்பிவிடும். ஒரு நிலையில், அந்த கண்ணாடித் தகட்டை எடுத்த பிறகும் கில்லர் மீன், சாது மீனை நோக்கி நகராதாம். முன் னேறிப் போனால், மூக்கு அடிபடும் என்று அந்த மீனுக்குப் பயம்.
         அடிபட்டாலும், பாதிப்புகள் வந்தாலும் ஒரு சிறிய இடைவெளி விட்டுத் தொடர்ந்து மோதுங்கள். பயத்தோடு பின்வாங்காதீர்கள் என்று சொல்கிறது நிர்வாகவியல்.வாழ்க்கையும் அப்படித்தான். மோதுங்கள். பயத்துக்கு எதிராகப் பலமாக மோதுங்கள்.உங்களைப் பயமுறுத்துகிற பயத்தைப் பயமுறுத்துங்கள். எதிர்கொள்வதற்கு நீங்கள் தயார் என்கிறபோது, பயம் பயப்படும்.
        முன்னேறுவதற்கும் முயல்வதற்கும் பயம் ஒரு தடையாக இருக்க முடியாது. அந்தப் பயம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை. இன்று தொடங்கலாம் பயத்தைப் பயமுறுத்தும் வேலையை. அது பல திசைகளை நமக்குச் சொல்லித்தரும்.

உச்சி மீது வானிடிந்து வீழுகின்றபோதிலும் அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே!
 

Tips to reduce the hip fat

Tip-1
1. sit straight in a stool , Both hands should be in shoulder level.
2. first turn to your right putting pressure in your hip, but dont turn your hip,your hip must be straight
do it for 10 times
3. then turn to your left same process.10 times
easy and u will reduce ur hip and belly too

Tip-2
cut little ginger pieces put in honey for first day night .next day mornig you eat that in empty stomach. continuously eat for 40 days.

Tip-3
சமமான தரையில் கை கால்களை நீட்டி படுத்துக் கொண்டு இரு கைகளையும் எடுத்து head ன் பின் கோர்த்து வைத்துக் கொள்ளவும்(படுத்துக் கொண்டே தான்) பின்னர் முட்டியை மடக்காமல் அப்படியே எழுந்து தலையால் முட்டியை தொட வேண்டும். கையை தலையில் கட்டிக் கொண்டு செய்ய முடியவில்லை என்றால் கையை தரையில் சமமாக வைத்துக் கொண்டே செய்யலாம். முதன்முதலில் செய்யும் போது 3 அல்லது 5 முறை செய்யவும். பின்னர் அப்படியே படிபடியாக அதிகரித்துக் கொள்ளலாம்.

Tip-4
முதலில் நேராக நிமிர்ந்து நின்று கொண்டு குனிந்து கைகளால் கால் கட்டை விரலை தொட முயற்சி செய்ங்க. ஆனால் முதலில் செய்யும் போது விரலை தொட வராது செய்ய செய்ய தான் வரும். மிக முக்கியம் கால்கள் மடங்க கூடாது. முதலில் 6 லிருந்து 10 வரை செய்ங்க அடுத்து அதையே அதிகப்படுத்திக்கோங்க.
அடுத்து கால்களை மடித்து தரையில் உட்கார்ந்துக் கொண்டு கைகளை பின்புறமாக கட்டிக் கொண்டு குனிந்து தலையால் தரையை தொடவும். இதுவும் முதலில் கஷ்டமாக இருக்கும் போகபோக பழகிவிடும்.

Tuesday, 11 May 2010

Never Giveup

    One day a young lady was driving along with her father.They came upon a storm, and the young lady asked her father, What should I do?". He said "keep driving".  Cars began to pull over to the side, the storm was Getting worse."What should I do." The young lady asked?. "Keep driving," her father replied.
    On up a few feet, she noticed that eighteen wheelers were also pulling over.She told her dad, "I must pull over, I can barely see ahead.  It is Terrible, and everyone is pulling over!" Her father told her, "Don't give up, just keep driving!"
    Now the storm was terrible, but she never stopped driving, and soon she Could see a little more clearly. After a couple of miles she was again on Dry land, and the sun came out. Her father said, "Now you can pull over and get out." She said "But why now?"
    He said "When you get out, look back at all the people that gave up and areStill in the storm, because you never gave up your storm is  now over.
    This is a testimony for anyone who is going through "hard times".just because everyone else, even the strongest, gives up. You don't have To...if you keep going, soon your storm will be over and the sun will shine
Upon your face again.
      This story touched me! I hope it touched you, too !!!

Saturday, 8 May 2010

தயக்கம்

நம்மை கீழே இழுக்கும் குணங்களுள் முக்கியமான ஒன்று: தயக்கம்!! ஒவ்வொருவரும் ஏதேனும் ஒன்றை சாதிக்க நினைக்கிறோம் ஆனால் அப்படி சாதிக்க நினைக்கும் விஷயத்திற்காக என்ன முயற்சி எடுக்கிறோம்? " எழுத்தாளராக வேண்டும்" "MBA படிக்க வேண்டும் " இப்படி ஒவ்வொருத்தருக்கும் எத்தனையோ ஆசைகள்.. ஆனால் அவை எல்லாம் ஆசை என்ற அளவிலேயே உள்ளதே அன்றி அடுத்த நிலை போவதில்லை. காரணம் நமக்குள் உள்ள தயக்கம் தான்
      இத்தகைய நேரத்தில்/ விஷயத்தில் இன்னொரு பிரச்சனை. இப்படி தாமதம் செய்யும் போது நாம் செய்யணும், செய்யணும் என நினைத்த விஷயத்தை இன்னொருவர் செய்து முடித்து விடும் ஆபத்தும் உள்ளது.

பெரியவர்கள் " நல்ல விஷயத்தை தள்ளி போடாதே; கெட்டது செய்யணுமா அதனை தள்ளி போடு " என்பார்கள். ஒருவருக்கு தானம் செய்ய நினைக்கிறோம்; அதனை விரைவில் செய்வதே நல்லது; இல்லா விட்டால் "வேறு யாராவது செய்யட்டும்; நாம் ஏன் செய்யணும்?" என மனசு நினைக்க ஆரம்பித்து விடும்.

அதே நேரம் ஒருத்தருக்கு கெட்டது செய்யணும் என தோன்றுகிறது: அவர் உங்களுக்கு செய்த தீங்கிற்கு உடனே திரும்ப குடுக்க தோன்றுகிறது. இதனை உடனே செய்ய வேண்டாம். முதலில் தள்ளி போட வேண்டும். சில மாதங்களில் அந்த எண்ணம் வலுவிழந்து விடும். சட்டத்தில் கூட நீண்ட நாள் பகையால் கொலை செய்தவரை நீதி மன்றம் கடுமையாய் பார்க்கிறது; " He was able to sustain such negative emotion for a long period of time" என!

நான் கவனித்த வரை MD மற்றும் CEO-க்கள் அநேகமாய் எதையும் தயக்கம் இன்றி செய்பவர்களாக, பேசுபவர்களாக உள்ளனர். இவர்கள் மட்டுமல்ல மிகுந்த தன்னம்பிக்கை உள்ளவர்கள் புதியவர்களிடம் கூட தயக்கம் இன்றி பழகுவதை, கேள்வி கேட்பதை, உதவிகள் வேண்டுவதை பார்த்துள்ளேன். இவர்கள் தான் பெரும்பாலும் வெற்றியாளர்களாக உள்ளனர்.

இன்டர்வியுக்களிலும், குறிப்பாக குருப் டிஸ்கஷன்களிலும் நாம் தயக்கம் இன்றி பேசுகிறோமா என்பது தான் முக்கியமாக கவனிக்கிறார்கள். நாம் சொல்லும் கருத்தை விட சொல்லும் விதம் (Confidence உடன் தயக்கம் இன்றி பேசுதல்) தான் அவற்றில் முக்கிய விஷயமாக கொள்ளபடுகிறது.

ஒரு எழுத்தாளரையோ, பதிவரையோ எடுத்து கொள்ளுங்கள். அவருக்கு இன்ன தான் எழுத வேண்டும் என யாராவது சொல்கிறார்களா என்ன? என்ன தலைப்பு என்பது முதல், என்ன எழுதுவது என்பது வரை தானே யோசித்து தயக்கம் உதறி மேலே செல்கிறார்கள்.

எந்த field-லுமே "Early bird has an advantage" என்பார்கள். தயக்கம் இன்றி, ஒரு முயற்சியை பிறர் துவங்கும் முன், துவக்கத்திலேயே ஆரம்பித்தவர்கள் ஓட்டத்தில் முன்னணியில் இருப்பார்கள்.

"நூறு மைல் பயணம் நீங்கள் முதல் எடுத்து வைக்கும் முதல் அடியில் தொடங்குகிறது" என்று ஒரு பழமொழி உண்டு. எத்தனை அர்த்தமுள்ள பழமொழி!!

சில வேலைகளை துவங்கும் போது அதனை முழுமையாய் எப்படி செய்து முடிப்பது என்பது குறித்த ஒரு தெளிவான ஐடியா இல்லாமல் இருக்கலாம். ஆனால் தொடர்ந்து போக போக அதனை எப்படி முடிப்பது என்ற தெளிவு வந்து விடும். மேலும் இது சம்பந்தமான மனிதர்களை நீங்கள் சந்திப்பது இயல்பாய் நடக்கும். அவர்கள் அதனை எப்படி முடிப்பது என்ற யோசனையும், உதவியும் செய்வார்கள். எல்லா வேலைகளும் (குறிப்பாய் இது வரை ஈடுபடாத புது வேலைகள்) இப்படி தான் முடிகிறது.

நீங்கள் இது வரை போகாத ஒரு இடத்திற்கு புதிதாய் செல்கிறீர்கள்; அப்போது ஆரம்பம் முதல் கடைசி வரை எந்த வழியாக போவது என முழுதும் தெரிந்தால் தான் போவேன் என்றால் அது நடக்கிற காரியமா என்ன? பயணத்தை துவங்கி விட்டால், போக போக யாரிடமாவது வழி கேட்டு, கேட்டு சென்று விடுகிறோம் தானே? வாழ்க்கையில் நாம் செய்யும் பல புது விஷயங்களும் இதே போல் தான்!!

Small matter matters much

ரு வீடு கட்டுவது முதலில் எங்கே ஆரம்பிக்கிறது தெரியுமா? பில்டர் முடிவு செய்வதிலா, கல் சிமென்ட் வாங்குவதிலா, CMDA போன்ற நிறுவனத்திடம் Plan approval வாங்கும் போதா? இவை எதுவும் இல்லை. ஒரு வீடு முதலில் அந்த குடும்ப தலைவன் அல்லது தலைவி மனதில் கட்டபடுகிறது. முதலில் நமக்கென வீடு வேண்டும் என்ற எண்ணம். அது தான் விதை. முதலில் ஆசையாக இருந்து பின் இலக்காக மாறுகிறது. ஒரு காலி மனை அல்லது flat பார்க்க ஆரம்பிக்கின்றனர், அது முடிவாகிறது; அப்புறம் பேங்க் லோனில் ஆரம்பித்து க்ரஹ பிரவேசம் வரை தொடர் ஓட்டம். கடைசியில் தனக்கென வீடு என்ற கனவு நனவாகிறது.

இது வீடு கட்டுவதற்கு மட்டுமல்ல, நீங்கள் அடைய விரும்பும் எந்த விஷயத்துக்கும் பொருந்தும்.

எதற்குமே துவக்கம் அதனை அடைய வேண்டும் என்ற எண்ணம் தான். எந்த செயலும் இரு முறை செய்யபடுகிறது; முதலில் மனதில், பின்பு தான் அதே செயல் நிஜமாய் நடக்கிறது. (Everything is created twice; first in the minds of individual and then it actually happens).

தனக்கு என்ன தேவை என்பதை தன்னை தவிர யாரால் சொல்ல முடியும்? துரதிஷ்ட வசமாக நம்மில் பலருக்கு நமக்கு என்ன தேவை என்பதே தெரிய வில்லை. நாம் என்ன செய்ய விரும்புகிறோம் என்று தீவிரமாக யோசிப்பதும், அது குறித்து தெளிவான, தீர்க்கமான முடிவெடுப்பதும் இல்லை.

நமக்கு என்ன தேவை என்பதில் நாம் தெளிவாக இருந்தால் 9 out of 10 times அதனை அடையலாம். அதனை அடையும் வழியில் எத்தனையோ பிரச்சனைகள், தடைகள் வரலாம். ஆனால் நாம் உறுதியாய், பொறுமையாய் இருந்தால் நமக்கு தேவையானதை அடைய முடியும்.

வீடு கட்டும் உதாரணத்தையே எடுத்து பாருங்கள். கட்டி முடிப்பதற்குள் எத்தனை தடை வந்திருக்கும்? தேவையான நேரத்தில் பணம் கிடைக்காது; பிளான் மாறும் குழப்பங்கள்; கட்டும் போது அடுத்து பில்டிங் காரர் ஏதாவது தகராறு செய்வார்.. இப்படி எத்தனையோ.. அனைத்தையும் தாண்டி அந்த வீடு கட்டி முடிக்கபடுகிறது.

அதே போல் தான் ஒரு தேர்வாகட்டும்; நீங்கள் அடைய எண்ணும் எந்த விஷயமாகட்டும் எத்தனையோ தடை வந்தாலும் நீங்கள் உறுதியாய் இருந்தால் அந்த இலக்கை அடையலாம்.

ங்களுக்கு என்ன தேவை என்பதை நீங்கள் முடிவு செய்து விட்டால், அது நீங்கள் சென்று சேர வேண்டிய destination போல fix ஆகி விடுகிறது. அடுத்து அதனை நோக்கி நீங்கள் பயணிக்கிறீர்கள். சேர வேண்டிய இடத்துக்கு எப்படியும் போகலாம்.. பேருந்தில், ரயிலில், ஆட்டோவில், அல்லது இவை கலந்த combination-ல், வழியில் சில நேரம் வண்டி break down ஆகும், தாமதமாகும், ஆனாலும் நீங்கள் அந்த இடத்தை சென்று அடைவீர்கள்! அதே போல் உங்கள் இலக்கு முடிவான பின், சில போராட்டங்கள் இருந்தாலும் நீங்கள் அதனை அடைவதும் நிச்சயமாகிறது.

வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது எங்கே போகிறோம் என்பது தெரியும் தானே. அதே போல் தான் வாழ்க்கையில் நீங்கள் எங்கு சென்று அடைய வேண்டும் என்பதும் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

Monday, 3 May 2010

4 minutes please

             பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் சிலபல செயல்களைத் தினமும் செய்ய வேண்டி இருக்கிறது. தேர்வுகளுக்குப் படிப்பது, அலுவலகப் பணிகளை முடிப்பது, வீட்டுப் பரணை ஒழிப்பது போன்ற வழக்கமான வேலைகளாக இருந்தாலும் சரி, காதலிக்குக் கடிதம் எழுதுவது, பால்ய கால நண்பர்களைத் தொலைபேசியில் அழைத்துப் பேசுவது, மனைவியின் கால்களை அமுக்கிவிடுவது போன்ற 'special assignment' களாக இருந்தாலும் அவற்றை ஆரம்பிக்க மலையளவு தயக்கம் நம்மைத் தடுக்கும். அந்த மாதிரியான சூழ்நிலைகளில் 'நாலு நிமிஷம்' கொள்கையை அமல்படுத்திப் பாருங்கள். அதாவது, தயக்கம் தடுத்துவைத்திருக்கும் எந்த ஒரு செயலையும் நாலே நாலு நிமிடங்கள் மட்டும் செய்யலாம் என்று முயன்றுபாருங்கள். நாலு நிமிடங்களுக்குப் பின் அதைத் தொடர்ந்து செய்யப் பிடிக்காவிட்டால், விட்டுவிடலாம் என்று தாஜா செய்து உங்கள் மனதை அதற்குத் தயார்ப்படுத்துங்கள். பெரும்பாலானவர்கள் ஒரு செயலை நாலு நிமிடங்கள் செய்யத் தொடங்கிவிட்டால், அதன் பிறகு அதை நிறுத்துவது இல்லையாம். ஒரே ஒரு முறை தள்ளிவிட்டால், அந்த விசையைப் பற்றிக்கொண்டே ஓடிக்கொண்டு இருக்கும் பெண்டுலம்போல. முதல் நாலு நிமிடங்களைக் கடத்திவிட்டால், ஆறு, ஏழு, எட்டாவது நிமிடங்கள் கடப்பதே தெரியாமல் கடந்துவிடும்.
              சின்னச் சோம்பல்கள் காரணமாக நாம் உதாசீனப்படுத்தும் சில சம்பவங்கள்தான் பெரிய பெரிய வருத்தங்களை பின்னர் ஏற்படுத்தும்.
விமானந்தாங்கி கப்பல்களின் மேல்தளத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அதிவேக ஜெட் விமானங்கள் ஒலி வேகத்தில் வந்து தளம் தொட்டு சொற்ப தூரத்தில் மொத்த வேகமும் இழந்து கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும். எத்தனைதான் பயிற்சி பெற்ற, அனுபவம் நிரம்பிய பைலட் கையாண்டாலும், அத்தனை வேகத்தில் கப்பல் மீது விமானம் இறங்கும்போது ஓடுதளத்தில் இருக்கும் சின்னக் காகிதச் சுருள் அல்லது ஆயில் கறைகூட அந்த விமானத்தை நிலைகுலையச் செய்துவிடலாம். இதனாலேயே கப்பலின் கேப்டனாக இருந்தாலும், சுற்றுப்புறத்தை ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறையும் ஒவ்வொரு விமானம் தளம் இறங்குவதற்கும் முன்னரும் சுத்தப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இது விமானந்தாங்கி கப்பல்களில் கடைப்பிடிக்கப்படும் கட்டாய விதி.

கிட்டத்தட்ட நமது மேஜையும் அதேபோன்ற ஒரு விமானந்தாங்கி தளம்தான். நமது தினசரி அலுவல்களின் தீவிரத்தை, வேகத்தை, அதற்கு நாம் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை நமது மேஜையும் தீர்மானிக்கும். முந்தைய நாள் குப்பைகள், கடந்த மாத நினைவூட்டல் கடிதங்கள், நினைவில் நிற்காத குறிப்புக் காகிதங்கள் - ஃபைல்கள் போன்றவை உங்கள் மேஜையை அடைத்துக்கொண்டு இருந்தால், அன்றைய தினம் நீங்கள் கிளப்ப வேண்டிய ஜெட் விமானத்தை அந்தக் குப்பைக் கூளங்களுக்குள் எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்? சடசடவென முடிவெடுத்து முடித்த காரியங்களின் குப்பைகளைக் கடாசிவிடுங்கள். முடிக்க வேண்டிய காரியங்களின் குறிப்புகள் மட்டுமே உங்கள் முன் இருந்தால், மலைஅளவு நிம்மதியை உணர்வீர்கள். மலையளவு குப்பை குவிந்துகிடந்தால், உலகளவு அழுத்தத்தை உணர்வீர்கள். உங்கள் ஜெட் விமானம் சீறிப் பாய வாழ்த்துக்கள்!
பி.கு: நாம் பழகும் சில பழக்கங்கள்தான், பிறகு நம்மை வடிவமைக்கின்றன!
சின்ன வயதில் பாட்டிகள் நமக்கு புவ்வா ஊட்ட, குளிக்கவைக்க நம்மை எப்படியெல்லாம் தாஜா செய்திருப்பார்கள். 'நீ இப்போ இந்த கீரைச் சாதத்தைச் சாப்பிட்டாதான், உனக்கு கடலை மிட்டாய் வாங்கிக் கொடுப்பேன்', 'ரெண்டே ரெண்டு மாத்திரை. அவ்வளவுதான்... உனக்கு சிவப்பு கலர் பலூன் வாங்கித் தாரேன்', 'மாவு மில்லுக்குப் போயி கோதுமையை அரைச்சுட்டு வந்தா, ஒரு மணி நேரம் வாடகை சைக்கிள் எடுத்து ஓட்டிக்கோ' - இப்படி அப்படி தாஜா செய்து தங்களுக்கு வேண்டிய காரியங்களைச் சாதித்துக்கொள்வது பாட்டிகள் பழக்கம். அந்தப் பாட்டி பழக்கத்தை இப்போது நாம் செயல்படுத்தினால் என்ன?
அதாவது, நமக்கு விருப்பம் இல்லாத ஒரு செயலைச் செய்து முடித்ததும், ரொம்பவே பிடித்தமான ஒரு செயலைச் செய்துகொள்ளலாம் என்று திட்டமிட்டுச் செயல்படுவது. உதாரணமாக, செமஸ்டர் தேர்வுகளுக்குப் படித்து முடித்ததும் டி.வி.டி-யில் ஜாக்கிசான் படம் பார்க்கலாம், அசைன்மென்ட் எழுதி முடித்ததும் காதலன்/காதலிக்கு எஸ்.எம்.எஸ்ஸலாம், இரவுக்குள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டால், நைட் ஷோ சினிமாவுக்குச் செல்லலாம், இந்த மாத டார்கெட்டை முதல் 25 நாட்களிலேயே எட்டிவிட்டால், கொடைக்கானலுக்கோ, ஊட்டிக்கோ ஒரு ட்ரிப் அடிக்கலாம் என அவரவருக்குப் பிடித்த பின்விளைவுகளை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். அந்தப் பிடித்த இரண்டாம் பாதியை எட்டுவதற்காக, முனைந்து முன்பாதியை முடித்துவிடுவீர்கள். ஆனால், விதிக்கப்பட்ட செயலைச் செய்து முடித்த பிறகுதான், விருப்பப்பட்ட செயலை முடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்.

பி.கு: எந்தக் கடின வேலையும், என்றோ ஒருநாள் செய்ய மறுத்த சுலப வேலைதான்!
எந்த ஒரு காரியத்துக்கும் டெட்லைன் விதித்துச் செயல்படுங்கள். காலையில் குளிக்கச் செல்வது, தினசரி அரட்டை நேரம், ஷாப்பிங் மணித் துளிகள், புராஜெக்ட் வேலைகள் என எந்த வேலையானாலும், மனசுக்குள் சின்ன காலக்கெடு நிர்ணயித்துக்கொள்ளுங்கள். அந்தக் காலக்கெடுவைத் தாண்டிவிட்டால், நீங்கள் பயப்படும் ஒரு அபாராதம் விதித்துக்கொள்ளுங்கள். 'டெட்லைன்' என்பதற்கு அர்த்தம் என்ன? அந்தக் கோட்டைத் தாண்டிவிட்டால், மரணம் நிச்சயம். அந்த 'மரண பயத்துடன்' எந்த ஒரு காரியத்தையும் செய்து பழகுங்கள். ரஜினி படத்தை முதல் ஷோவில் அமர்ந்து பார்க்க முண்டியடிக்கும் அதே ஆர்வத்தை 'டெட்லைன்' சங்கதிகளிலும் காட்டுங்கள்!
பி.கு: இந்த நொடிதான் என்றுமே வாழ்க்கையில் மிக முக்கியமானது!

'Involvement makes you important'

எப்போதும் எல்லோராலும் தேடப்படும் ஒரு நபராக நீங்கள் இருக்க வேண்டுமா..? உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து நீங்கள் வித்தியாசப்படுங்கள். அதற்குப் பல தளங்களில் உங்கள் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்வது அவசியம். 'Involvement makes you important' என்று ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. ஒரு விஷயத்தைப்பற்றி ஆர்வம் இல்லாதபோதுதான் நமக்கு அதைப்பற்றி எதுவுமே தெரியாது. ஆனால், ஆர்வத்துடன் செயல்பட்டால் எந்த விஷயத்திலும் நம்மால் 'எக்ஸ்பர்ட்' ஆகிவிட முடியும்.

தினமும் ஒரு இஞ்ச்!

தினமும் உங்கள் தன்னம் பிக்கையை அதிகரித்துக்கொள்ள இந்த நான்கு விதிகளைக் கட்டாயம் கடைபிடியுங்கள்.
  1. உங்களைப் படுக்கையில் இருந்து துள்ளியெழச் செய்யும் அளவுக்கு இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்! 
  2. உங்களுக்கு என்ன தேவை, உங்களுக்கு எது மட்டும் தேவை என்பதில் தெளிவாக இருங்கள்!
  3. உங்கள் இலக்கை அடைய உங்கள் உழைப்பு மட்டுமே போதுமானதாக இருக்குமாறு அமைத்துக் கொள்ளுங்கள்
  4. இலக்குகளைச் சின்னச் சின்னப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு, பகுதி பகுதியாக நிறைவேற்றிவெற்றிக் கோட்டை எட்டிப்பிடியுங்கள்!
 
உள்ளுக்குள் உறங்குது எரிமலை!
மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டீர்கள். என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்றே தெரியாமல் சில முட்டாள்தனமான காரியங்களைச் செய்கிறீர்கள். அப்போது என்ன செய்வது? இந்த இடத்தில் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்.
  1. உங்கள் வீட்டுக் கதவின் நிறம் என்ன?
  2. அந்தக் கதவில் சாவித் துவாரம் எந்தப் பக்கம் இருக்கிறது?
இந்த நொடி உங்கள் கற்பனையில் உங்கள் வீட்டுக் கதவு, அதன் நிறம், சாவித் துவாரம் ஆகியவை காட்சி களாக விரிகின்றனவா? அதுதான்... அதேதான்!
இந்த நிஜத்தைக் கற்பனை செய்யும் யுக்தியைத்தான் சிக்கலான சூழல்களைச் சமாளிக்கவும் நாம் கையாள வேண்டும். மனம் நொந்து வெந்து நீங்கள் சொதப்பிக் கொண்டு இருக்கும் சமயம், ஒரு நிமிடம் அமைதியாக உட்காருங்கள். அதற்கு முன் உங்கள் சாதனை என்று நீங்கள் நினைக்கும் சம்பவத் தருணங்களையோ, 'பின்னிட்டப்பா!' என்று மற்றவர்கள் உங்களைப் பாராட் டிய தருணங்களையோ மீண்டும் உங்கள் மனத்திரையில் ஓட்டிப் பாருங்கள். முன்னரே நீங்கள் அனுபவித்த இனிய நினைவுகளை 'ஃப்ளாஷ்பேக்'கும்போது உங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தும் அந்தத் தருணத் துக்கே சென்று மீளும். நிற்க. அதிகபட்சம் ஒரு நிமிடம் தான். அந்த சந்தோஷத் தருணத்தில் கொஞ்சமே கொஞ்சம் நீச்சலடித்து மீண்ட பிறகு, இந்த நொடிக்குத் திரும்புங்கள். இப்போது உங்கள் முன் இருக்கும் இக்கட்டு அத்தனை மிரட்டலாக இருக்காது!
இலகுவானது அல்ல இலக்கு!
          'size does matter' என்பார்கள். அதாவது, அளவும் முக்கியம்! வெறுமனே இலக்குகளை நிர்ணயிப்பது மட்டும் போதாது. உங்களைச் செயல்படத் தூண்டும் அளவுக்கு இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். உதாரணமாக, 'நாளை எழுந்து எட்டாவது சேப்டரை மட்டும் படித்தால் போதும்' என்பது இலக்காக இருந் தால், தாமதமாகப் படுத்து சோம்பலாக எழுந்து நிதானமாக அடுத்தடுத்த வேலைகளைப் பார்ப்பீர்கள். அதுவே, '10, 11, 12 என மூன்று சேப்டர்களை முடிக்க வேண்டும்' என்பதை இலக்காக நிர்ணயித்துக்கொண்டால், அதிகாலை ஐந்து மணிக்கு மேல் உங்களுக்குத் தூக்கம் பிடிக்காது. தீப்பிடித்ததுபோல அலறி ஓடுவீர்கள். அந்த ஓட்டத்தின் ஒவ்வொரு துளி வியர்வையும், ஒரு பவுன் தங்கக் காசுதான்.
          படிப்பு, வேலை என்றில்லை... அன்றைய தினம் நீங்கள் எது சம்பந்தமாகத் திட்டமிட்டு இருந்தாலும், அதன் இலக்கைச் சில மி.மீ. (முடிந்தால் கி.மீ.) உயர்த் துங்கள். 'ஐந்துக்குப் பதில் இன்று 50 வாடிக்கை யாளர்களைச் சந்திப்பேன்!', 'இன்றைய பார்ட்டியில் அனைவரது கவனமும் என் பக்கம் இருக்கும்படி ஜோக் அடிப்பேன்', 'இன்று ஜிம்மில் வழக்கத்தைவிட அரை மணி நேரம் அதிகமாகச் செலவழிப்பேன்!' என்று அன்றைய அனைத்து நடவடிக்கைகளுக்கும் இலக்கு நிர்ணயிங்கள். இவ்வாறு நீங்கள் செயல்படும்போது, உங்களுக்குள் நிகழும் மாற்றங்களை மற்றவர்கள் பளிச் என உணர்வார்கள். இப்படி இலக்குகளை உயர நிர்ண யிப்பதில் இன்னொரு வசதி என்னவென்றால், இலக் கில் பாதியை எட்டினாலே அது வழக்கத்தைக் காட்டி லும் அபாரப் பாய்ச்சலாக இருக்கும்!
இந்த நாள்... உன் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்!
வீடு வாங்குவது, இன்ஜினீயரிங் படிப்பில் டிஸ்டிங்ஷன் பெறுவது, விருப்பப்பட்ட வேலையைப் பெறப் போராடுவது, ஆசைப்பட்ட பெண்ணிடம் காதலைத் தெரிவிப்பது, பிரபல பள்ளியில் குழந்தையைச் சேர்ப்பது என எந்த இலக்கு நிர்ணயித்தாலும், தினமும் அதை நோக்கி ஒரு இன்ச் ஆவது முன்னேறுங்கள். அதாவது அந்த இலக்கை நோக்கிய பயணத்தை ஒரு பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். தினமும் நாம் அலுவலகத்  துக்கோ, பள்ளிக்கோ, கல்லூரிக்கோ செல்கிறோம். எத்தனை அவசரம் இருந்தாலும், என்றாவது ஒருநாள் ஆடை அணிய மறந்து நிர்வாணமாக அந்த இடங் களுக்குச் சென்றிருக்கிறோமா? 'அடச்சே! அவசர அவசரமாக் கிளம்புனேனா... அதான் டிரெஸ் போட மறந்து அப்படியே வந்துட்டேன்' என்று நம்மில் யாராவது புலம்பி இருக்கிறார்களா? மாட்டார்கள். ஆடை அணிவதை ஒரு பழக்கமாக்கிக்கொண்டதால் எத்தனை சிக்கலான சூழலாக இருந்தாலும், ஆடை அணிய மறக்க மாட்டோம். இலக்கை நோக்கிய உங்கள் நடவடிக்கைகளையும் அப்படி தினசரி நடவடிக்கை ஆக்கிக்கொள்ளுங்கள். அது உள்ளுக்குள் ஊறிவிட்டால், போகிறபோக்கில் நீங்கள் உயரங்களை எட்டிப் பிடித்து விடுவீர்கள்!

மிக மிகச் சுருக்கமாக, தினமும் உங்கள் தன்னம் பிக்கையை அதிகரித்துக்கொள்ள இந்த நான்கு விதி களைக் கட்டாயம் கடைபிடியுங்கள்.
1) உங்களைப் படுக்கையில் இருந்து துள்ளியெழச் செய்யும் அளவுக்கு இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்!
2) உங்களுக்கு என்ன தேவை, உங்களுக்கு எது மட்டும் தேவை என்பதில் தெளிவாக இருங்கள்!
3) உங்கள் இலக்கை அடைய உங்கள் உழைப்பு மட்டுமே போதுமானதாக இருக்குமாறு அமைத்துக் கொள்ளுங்கள்!
4) இலக்குகளைச் சின்னச் சின்னப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு, பகுதி பகுதியாக நிறைவேற்றிவெற்றிக் கோட்டை எட்டிப்பிடியுங்கள்!