Wednesday, 24 April 2013

Miles to go before I sleep

எப்படி அளக்கீறீர்களோ அப்படியே அளக்கப்படுவீர்கள்.
தங்களுக்கு தாங்களே போட்டு வைத்திருக்கும் வட்டங்களில் இருந்து தங்களைச் சுற்றி எழுப்பிக் கொண்டிருக்கும் சுவர்களை உடைத்துக் கொண்டு வெளியில் வர வேண்டும்.
எத்தனையோ அரிய பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தும் வெறும் ஆய்வு செய்து கொண்டு கிணற்றுத் தவளைகளாக இருக்க கூடாது.

உயரமான மலை உச்சியிலிருந்து பெரும் இரைச்சலுடன் விழுந்து ஓடும் அருவியைப் போல வாழ்க்கைப் பாதையில் முன்னேறி விட வேண்டும்.தைரியசாலிகளாகவும் எந்த சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி கொள்பவராகவும் இருக்க வேண்டும்.

ஒருவர் எந்த வேலையிலும் இருக்கலாம்.எந்த அலுவலகத்திலும் பணிபுரியலாம்.சொந்தமாக தொழில் செய்பவராகவும் இருக்கலாம் ஆனால் அங்குள்ள எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய வேண்டும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் தட்டிக் கழிக்கக் கூடாது

எந்த அளவு நம்முடைய உழைப்பும், புத்திக்கூர்மையும், நேர்மையும் நமக்கு இருக்கின்றதோ அந்த அளவு சீக்கிரம் நாம் மேற்கொண்டுள்ள துறையில் முன்னுக்கு வந்து விடலாம்.

ஏற்றுக் கொண்ட லட்சியத்தில் பிடிவாதமாக இருக்க வேண்டும். லட்சியத்தை நிறைவேற்ற நாம் எதை வேண்டுமானாலும் இழக்கலாம் ஆனால் லட்சியத்தை இழக்ககூடாது.

மெய்வருத்தம் பாரார்,பசி நோக்கார்,கண்துஞ்சார் கருமமே கண்ணாயினார் என்பார்கள் அந்த அளவிற்க்கு நம் பங்களிப்பை நாம் நமது லட்சியத்திற்க்கு தர வேண்டும் அப்படி செய்தால் நிச்சயம் நமக்கு வெற்றி தான்.

வெற்றியாள்ர்கள் நாள்,கிழமை, நல்ல நேரம், கெட்ட நேரம் இவை பார்ப்பதில்லை இறைவன் அளித்த நாளில் நேரங்களில் எல்லாமே நல்ல நேரம் தான் என்று என்ணுவர்.
நாளை, மறுதினம் என்று ஒத்திப் போட மாட்டார்கள் இன்று இப்போது என்று செய்வார்கள்.

மனிதன் தான் எஜமானன், பழக்கவழக்கங்கள் அல்ல. முன்னேற்றத்திற்க்கு உதவாத பழக்கங்களை அவனால் விடமுடியும் உபயோகமான பழக்கங்களை ஏற்படுத்த முடியும்.