Sunday, 16 January 2011

இதய நோயை தடுக்கிறது (Brown Rice) கை குத்தல் அரிசி

இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் ஆபத்தை கைக்குத்தல் அரிசி எனப்படும் பாலீஷ் செய்யப்படாத அரிசி உணவுகள் தடுக்கும் என்று அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் பிலெடல்பியாவில் உள்ளது டெம்பிள் பல்கலைக்கழகம். அதன் மருத்துவ பிரிவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, பாலீஷ் செய்யப்படாத அரிசியால் உடல்நலனுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டது. ஆன்டியோடென்சின் என்ற புரோட்டீன்தான் ரத்த அழுத்தம் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது. அதன் காரணமாக இதய நோய்கள் ஏற்பட வழிவகுக்கிறது.
பாலீஷ் செய்யப்படாத அரிசியின் மேல் உள்ள மெல்லிய சிகப்புத் தோல் அதைக் கட்டுப்படுத்துவது ஆய்வில் தெரிய வந்தது. அரிசியின் மேலே படிந்திருக்கும் மெல்லிய தோல் சுபாலெரோன் எனப்படுகிறது. இது உமி எனப்படும் மேல் பகுதிக்கும் வெள்ளை நிற அரிசிக்கும் இடையே உள்ளது. அதில் விரைவான ஜீரண சக்திக்குத் தேவையான நாரிழை, உடல் நலனுக்கு முக்கியமான ஆலிகோசாச்ரைட் என்ற பொருள் உள்ளது. அந்த தோல் பகுதிதான் அரிசி உணவில் சத்தை அதிகரிக்கிறது.
அரிசியை பாலீஷ் செய்வதால் இந்த மெல்லிய தோல் நீக்கப்படுகிறது. அதில் செறிந்துள்ள சுபாலெரோன் இல்லாமல் போய் விடுவதால் அரிசி உணவின் முக்கிய சத்துக்கள் கிடைக்காமல் போகின்றன. எனவே, நெல்லில் இருந்து அரிசியைப் பிரிக்கும்போது பாதி பாலீஷ் போடுவது நல்லது. அது உடலுக்கு நன்மை தரும்.
இதுபற்றி ஆராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த எகுசி கூறுகையில், ‘‘அரிசியின் மேல் உள்ள ஆன்டியோடென்சினை தனியாகப் பிரித்தெடுத்தோம். அதனுடன் எத்தனால், மெத்தனால், எதில் அசேடட் ஆகிய ரசாயனங்களைச் சேர்த்து அதன் விளைவுகளை ஆராய்ந்தோம். அது இதயப் பகுதியின் செல்களை மென்மையாக்கி ரத்த ஓட்டத்தை சீராக்குவதை கண்டுபிடித்தோம். எனவே, பாலீஷ் செய்யப்படாத அல்லது பாதி பாலீஷ் செய்த அரிசி உணவுகளைச் சாப்பிடுவதால் இதய நோய், ரத்த அழுத்தத்தை தடுக்க முடியும்’’ என்றார்.

ஒரு கப் பிரவுன் ரைஸினை சாப்பிடுவதால் நம்முடைய உடலிற்கு ஒரு நாளைக்கு தேவையான 88% மேகனிஸியம் கிடைக்கின்றது. அதுமட்டும் இல்லாமல் மேகனிஸியம் நமக்கு அதிக அளவு சத்தினை கொடுக்கின்றது. இதனால் எளிதில் சாப்பாட்டில் இருந்து Energy வெளிபடுகின்றத்து. மேகனிஸியம் + கல்கியம் சேர்த்தால் தான் நம்முடைய எலும்புகள் உறுதியாக இருக்கின்றது என ஆய்வுகளில் கூறுகின்றனர். அதனால் தான் என்னவோ நம்முடைய நாட்டில் வயதனாபிறகு எல்லொருக்கும் கண்டிப்பாக மூட்டுவலி வருகின்றது…

பிரவுன் ரைஸில் அதிக அளவு நார்சத்து(Fiber) இருப்பதால் Colon Cancerயினை கட்டுபடுத்த அதிகம் உதவுகின்றது.அத்துடன் இதில் ஸெலினியம் என்பதும் காணப்படுகின்றது. இதனால் Thyroidயினை கட்டுபட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகின்றது மற்றும் புற்றுநோயினை போக்கவும் வழி வகுகின்றது.

பிரவுன் ரைஸ் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். இந்த அரிசி வேகவைக்க சிறிது நேரம் எடுக்கும் (சுமாராக 30 – 40 நிமிடங்கள்). அதே போல இந்த அரிசியில் இருக்கும் ஒரே ஒரு குறை என்றால் இதனை வாங்கியவுடன் சீக்கிரம் சமைத்து முடித்துவிட வேண்டும். (Expires Soon). அதனால் இதனை முட்டையில் வாங்காமல் சிறிய பக்கட்டில் வாங்கனால் மிகவும் நல்லது. (நான் சொல்வது 2 நபர் உள்ள குடும்பத்திற்கு..சிறிய பக்கட்)

பிரவுன் ரைஸினை சாப்பிடுவதால் எற்படும் பயன்கள்,

oஉடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது.

oஇதில் சக்கரை அளவு 0. அதனால் இதனை சக்கரை நோயளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டியது.

o புற்று நோயினை வரமால் தடுக்கின்றது.

o Thyroidயினை கட்டுபட்டுகுள் வைக்கின்றது.

o கெட்ட கொழுப்பினை நீக்கிவிடுகின்றது.

oசிறுநீரக கல் வராமல் தடுகின்றது. (அதிக அளவு நார்சத்து இருப்பதால்)

o உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.

குண்டு உடலைக் குறைக்க!

சிறிய நடைமுறைகள் கூட போதும்,
உடல் எடைறை குறைக்க: இது போன்ற சிகிச்சை முறை தவிர, ஆரோக்கியமான சில சிறிய நடைமுறைகளை கடைபிடித்தாலே போதும்; உடல் எடையை குறைத்துக் கட்டுக்குள் கொண்டு வரலாம், என ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அத்தகைய சில சுலப வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

நொறுக்கு தீனியை குறைக்க சுலப வழி:
சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை, நம்மை அறியாமலே கொறித்துக் கொண்டிருப் போம். இவ் வாறு நொறுக் குத் தீனிகளை சாப்பிட்டுக் கொண்டே இருந்தால், உடல் எடை குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. அதற்காக, நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதை முழுவதுமாக கைவிட வேண்டும் என்றில்லை. அதற்கு பதிலாக, ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்னும், ஒரு பேப்பரில் எத்தனை மணிக்கு, என்ன வகையான நொறுக்குத் தீனி, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை குறித்துக் கொள்ளலாம். இதன் மூலம் எவ்வளவு நேர இடைவெளியில் சாப்பிடுகிறோம்; எதை அதிகளவு சாப்பிட்டுள்ளோம் என்பதை தெரிந்து, அதற்கேற்ப உணவு முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் உடலில் சேரும் கூடுதல் கலோரிகளையும் கட்டுப்படுத்தலாம்.
எப்போதும் செயல்பட்டுக் கொண்டே இருத்தல்:
'டிவி' நிகழ்ச்சிகள் போன்றவற்றை பார்க்கும் போது, ஒரே இடத்தில் எவ்வித அசைவும் இன்றி இருக்காமல், ஸ்கிப்பிங், நடனமாடுதல், மாடிப்படிகளில் ஏறி இறங்குதல் போன்றவற்றை செய்யலாம். இவற்றை, 'டிவி' நிகழ்ச்சிகளின் இடைவேளை நேரங்களில், இரண்டு நிமிடங்கள் செய்தாலே போதும். உடலில் எடையைக் குறைக்க, இது ஒரு நல்ல வாய்ப்பு.
தினசரி நடக்க வேண்டும்:
தினசரி 30 நிமிடங்கள், உடற்பயிற்சி செய்வதால், 120 கலோரிகள் கூடுதலாக குறைகிறது. ஆனால், இதை அவ்வளவு எளிதில் எட்டி விடமுடியாது. இதற்கு நடந்து செல்லுதல் உட்பட சில சுலப வழிகளை கடைபிடிக்கலாம். அருகில் உள்ள கடைகள் மற்றும் கோவில் என்று எங்கு செல்வது என்றாலும், பலரும் வாகனங்களில் செல்ல தான் விரும்புகின்றனர். அருகில் உள்ள ஒரு இடத்திற்கு கூட, நடந்து செல்ல விரும்புபவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. நடைபயிற்சிக்கென தனியே நேரத்தை ஒதுக்காமல், நமக்கு தேவையான பொருளை வாங்க, அருகில் உள்ள கடைக்கு நடந்து செல்லலாம். பக்கத்து தெருவில் உள்ள உறவினர்களுடன் தொலைபேசியில் பேசுவதை தவிர்த்து, அவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று பேசலாம். மதிய உணவு நேரம் மற்றும் இரவு உணவுக்கு பின், சிறிது நேரம் நடக்கலாம்.
மெதுவாக சாப்பிட வேண்டும்:
உணவை மெதுவாக சாப்பிடுவதன் மூலம் சாப்பிடும் அளவை குறைக்கலாம். அதாவது, முதலில் உ<ணவின் வாசனையை முகர்ந்து பார்க்க வேண்டும். பின்னர், அந்த உணவில் சிறிதை எடுத்து வாயில் வைத்து, மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். முழு உணவையும் சாப்பிட்டு முடிக்கும் வரை, இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். இவ்வாறு உணவை சாப்பிட மிக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் போது, அதனால், மனதுக்கு முழு திருப்தி கிடைக்கும். குறைவாக சாப்பிட விரும்பினால், மெதுவாக சாப்பிட வேண் டும் என்பதே, உணவு முறையாளர்கள் கருத்து. ஏனென்றால், வயிறு முழுமையடைந்து விட்டது என்பதை உணர, சில நிமிடங்கள் ஆகும். மேலும், மெதுவாக சாப்பிடுவதால், எளிதில் ஜீரணமாதல், வயிறு உப்புசம் மற்றும் வயிற்று பொருமல் ஆகியவை ஏற்படாமல் தவிர்த்தல் போன்ற பயன்களும் உள்ளனபடித்து ரசித்தது

கொடி இடை வேண்டுமா????

இன்றைய பெண்களின் கவலைக்குரிய பிரச்னை வயிறும் இடுப்பும் ‘புசுபுசு’ என்று பெருத்துப் போவது!
வெறும் வாணலியைச் சூடு செய்து, அதில் கைப்பிடி அளவு சோம்பைப் போட்டு, புரட்டுங்க. மிக்ஸியிலிட்டு பொடிச்சுக்குங்க. அரை லிட்டர் தண்ணியிலே போட்டு, நன்றாகக் கொதிக்க வெச்சு வடிச்சு, அடிக்கடி குடிச்சாலே தொப்பை கரைய ஆரம்பிக்கும்.
கைப்பிடியளவு பார்லியை நாலு மணி நேரம் ஊற வெச்சு, இரண்டு தம்ளர் நீரில் வேக வெச்சு, அந்தத் தண்ணீரைக் குடிச்சுட்டு வந்தாலும், கொழுப்புத் தசைகள் கரையும்.
தொப்பை மட்டுமல்ல, உங்க உடம்பே வாகாக இளைக்கணும்னா தினமும் காலையிலும் மாலையிலும், குனிஞ்சு நிமிருங்கள் வீட்டு ஹாலில் வரிசையாக பத்து கர்ச்சீப்புகளை போட்டுவிட்டு, குனிந்து எடுத்து பயிற்சி போல செய்யுங்க. குறிப்பாக உங்களுடைய அபிமான டீ.வி நிகழ்ச்சியின் போது செய்தால், டூ இன் ஒன் பலன் கிடைக்கும்!
ஃப்ரெஷ் சாலட் உங்களுக்குக் கை கொடுக்கும். குடைமிளகாய், மாதுளம்பழம், ஆப்பிள், உலர் திராட்சை, வெள்ளரி போன்றவற்றைத் துண்டுகளாக்கி ஆலீவ் ஆயில், எலுமிச்சை சாறு போட்டு ஊற வைக்கவும். மதிய உணவின்போது ஒரு பெரிய கப் நிறைய சாலட்டையும் இரண்டு சப்பாத்தியையும் மட்டும் சாப்பிடவும். கண்டிப்பாக ஆறே மாதங்களில் செல்லத் தொப்பை காணாமல் போய், முல்லைப்பூ போல இருப்பீங்க!

தேவை

: வெள்ளரி விதை - 100 கிராம்,

சந்தனப் பவுடர் - 10 கிராம்,

வெட்டி வேர் - 25 கிராம்


உபயோகிக்கும் முறை:

வெட்டி வேரை, சிறு துண்டுகளாக வெட்டி, வெயிலில் ‘மொறு மொறு’ என்று உலர்த்தவும்.

அத்துடன் வெள்ளரி விதை, சந்தனப் பவுடர் சேர்த்து, மிக்ஸியில் பொடி செய்யவும்.

ராத்திரி இரண்டு ஸ்பூன் வெட்டி வேர் பவுடரை, தண்ணீரில் குழைத்து, வயிற்றில் தடவிக் கொண்டு படுக்கவும். வயிற்றின் தொள தொள சதைகள் நாளடைவில் இறுகி, புதுப் பொலிவுடன் இருக்கும்.

Saturday, 15 January 2011

வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !

# ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதை நிறுத்துங்கள்: சமீப காலங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொல்தான் இந்த மல்டிடாஸ்கிங் என்பது அடிப்படையில், அறிவியல்ரீதியாகப் பார்த்தால் மல்டிடாஸ்கிங் என்பது ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்குத் தாவுவது/ மாறுவது என்று பொருள்படும். நம் மூளையால், ஒரே நேரத்தில் இரண்டு/மூன்று கடினமான செயல்களில் கவனம் செலுத்த முடியாது. ஆக, மல்டிடாஸ்கிங் செய்வது பயனற்றது மற்றும் அயர்ச்சியைத் தரக்கூடியது.
# முக்கியத்துவம் வாய்ந்த செயல்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்: ஒவ்வொரு நாளுக்குமான தலையாய செயல்களை மனதில் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் தேர்வுகளின் முக்கியத்துவங்கள் மாற்றியமைக்கப்பட்டால் பொறுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, தீப்பற்றிக்கொண்ட ஒரு கட்டடத்தைவிட்டு வெளியேறுவதை விட பணியிடத்தில் ஒரு விண்ணப்பத்தை எழுதி முடிக்க வேண்டுமென்பது முக்கியமானதல்ல !
# உடற்பயிற்சி செய்யுங்கள்: உங்கள் உழைப்புத்திறனையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்த மனநலம் மிக அவசியம். அதனால், புதிய யுக்திகளைக் கண்டறியவும் மன நலனை மேம்படுத்தவும், பணிக்கிடையே நல்ல காற்றைச் சுவாசித்துக் காலார நடந்துவிட்டு வாருங்கள் !
# முடியாது என்பதைக் கனிவாகச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் : நம் பணிகளுக்கிடையில் நண்பர்களுக்கு சிறிய உதவிகள் செய்வதென்பது அவசியம்தான் என்றாலும், அச்சிறு உதவிகள் சில சமயங்களில் மிகுந்த நேரம் பிடிப்பவையாக, களைப்பைத் தருபவையாக, முக்கியத்துவம் குறைந்தவையாக இருக்கும் பட்சத்தில், கனிவாக என்னால் இவ்வுதவி செய்ய இயலவில்லை எனச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் ! இது உங்கள் நேரத்தைச் சேமிக்கவும், மன உளைச்சலைத் தவிர்க்கவும் உதவும்.
# காலையில் ஒரு 15 நிமிடம் முன்பாக எழ முயற்சி செய்யுங்கள் : ஒவ்வொரு நாளும் காலையில் சீக்கிரம் எழுந்து, பணிகளைத் தொடங்குமுன் திக்ரு செய்யவோ, உங்களின் டைரிக் குறிப்பு எழுதவோ பழகிக்கொள்ளுங்கள். உடல் நலனைப்போலவே மனநலனும் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாதது. உடற்பயிற்சியிலும், மனநலன் காக்கும் செயல்களிலும் ஈடுபடுங்கள்.
# போதுமான அளவு ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் : ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லுமுன், அதிகப்படியாக நீங்கள் செலவு செய்யும் ஒரு மணிநேரம். உங்களின் அடுத்த நாளின் ஒரு மணி நேர வேலையைக் குறைப்பதில்லை. ஓய்வின்றி வேலை செய்பவர்கள் குழப்பத்துக்குள்ளாவார்கள் என்று கூறுகிறது உளவியல்.
# எதிர்பார்ப்புகளை மேலாண்மை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள் : உங்கள் அறையைக் குப்பையாக்கிவிட்டு விழுந்து விழுந்து சுத்தம் செய்வதற்குப் பதிலாகக் குப்பைகள் சேர்வதை முன்பே தவிர்த்து விட்டால், குப்பையைச் சுத்தம் செய்வதில் வீணாகும் உங்களின் பொன்னான நேரம் சேமிக்கப்படும்.
# மின்னஞ்சல் வாசிக்கும் நேரத்தைத் திட்டமிட்டு வைத்துக் கொள்ளுங்கள் : மின்னஞ்சல்களைத் தினசரி சரியாகத் திட்டமிட்டுத் தக்க நேரத்தில் கவனித்துக்கொண்டால் நேர விரயம் ஏற்படாது. அதே மாதிரி, வேறு வேலை செய்யும்போது மின்னஞ்சல்களைப் பார்க்காதீர் : அது கவனச்சிதறலை ஏற்படுத்தும்.
# தேவையில்லாதபோது இணையம்/ செல்பேசியை அணைத்து விடுங்கள்: இணையத்தை உலாவுவதிலும், செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்புவதிலுமே காலத்தைக் கழிக்க வேண்டாம்: இரண்டையும் தேவையில்லாத செயல்களில் அணைத்துவிடுவது நலம் பயக்கும்.
# செயல்பட அதிக நேரம் இருப்பதாக எண்ணிக்கொள்ளுங்கள்: ஒவ்வொரு செயலைச் செய்யவும் போதுமான நேரம் இருக்கும் பட்சத்தில், அதை உணர்ந்து மன உளைச்சலைத் தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட அந்தச் செயலுடன் தொடர்பில்லாத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
நாம் எப்போதும் இறந்த காலத்திலும், எதிர்காலத்திலும் வாழ்வதைத் தவிர்த்து நிகழ்காலத்தில் வாழப் பழகிக்கொண்டால் மன அழுத்தம் இருந்த இடம் தெரியாமல் தொலைந்துவிடும். வாழ்க்கையை வாழப் பழகிக்கொள்ளுங்கள். வெற்றி நமக்கே.