Saturday, 8 May 2010

Small matter matters much

ரு வீடு கட்டுவது முதலில் எங்கே ஆரம்பிக்கிறது தெரியுமா? பில்டர் முடிவு செய்வதிலா, கல் சிமென்ட் வாங்குவதிலா, CMDA போன்ற நிறுவனத்திடம் Plan approval வாங்கும் போதா? இவை எதுவும் இல்லை. ஒரு வீடு முதலில் அந்த குடும்ப தலைவன் அல்லது தலைவி மனதில் கட்டபடுகிறது. முதலில் நமக்கென வீடு வேண்டும் என்ற எண்ணம். அது தான் விதை. முதலில் ஆசையாக இருந்து பின் இலக்காக மாறுகிறது. ஒரு காலி மனை அல்லது flat பார்க்க ஆரம்பிக்கின்றனர், அது முடிவாகிறது; அப்புறம் பேங்க் லோனில் ஆரம்பித்து க்ரஹ பிரவேசம் வரை தொடர் ஓட்டம். கடைசியில் தனக்கென வீடு என்ற கனவு நனவாகிறது.

இது வீடு கட்டுவதற்கு மட்டுமல்ல, நீங்கள் அடைய விரும்பும் எந்த விஷயத்துக்கும் பொருந்தும்.

எதற்குமே துவக்கம் அதனை அடைய வேண்டும் என்ற எண்ணம் தான். எந்த செயலும் இரு முறை செய்யபடுகிறது; முதலில் மனதில், பின்பு தான் அதே செயல் நிஜமாய் நடக்கிறது. (Everything is created twice; first in the minds of individual and then it actually happens).

தனக்கு என்ன தேவை என்பதை தன்னை தவிர யாரால் சொல்ல முடியும்? துரதிஷ்ட வசமாக நம்மில் பலருக்கு நமக்கு என்ன தேவை என்பதே தெரிய வில்லை. நாம் என்ன செய்ய விரும்புகிறோம் என்று தீவிரமாக யோசிப்பதும், அது குறித்து தெளிவான, தீர்க்கமான முடிவெடுப்பதும் இல்லை.

நமக்கு என்ன தேவை என்பதில் நாம் தெளிவாக இருந்தால் 9 out of 10 times அதனை அடையலாம். அதனை அடையும் வழியில் எத்தனையோ பிரச்சனைகள், தடைகள் வரலாம். ஆனால் நாம் உறுதியாய், பொறுமையாய் இருந்தால் நமக்கு தேவையானதை அடைய முடியும்.

வீடு கட்டும் உதாரணத்தையே எடுத்து பாருங்கள். கட்டி முடிப்பதற்குள் எத்தனை தடை வந்திருக்கும்? தேவையான நேரத்தில் பணம் கிடைக்காது; பிளான் மாறும் குழப்பங்கள்; கட்டும் போது அடுத்து பில்டிங் காரர் ஏதாவது தகராறு செய்வார்.. இப்படி எத்தனையோ.. அனைத்தையும் தாண்டி அந்த வீடு கட்டி முடிக்கபடுகிறது.

அதே போல் தான் ஒரு தேர்வாகட்டும்; நீங்கள் அடைய எண்ணும் எந்த விஷயமாகட்டும் எத்தனையோ தடை வந்தாலும் நீங்கள் உறுதியாய் இருந்தால் அந்த இலக்கை அடையலாம்.

ங்களுக்கு என்ன தேவை என்பதை நீங்கள் முடிவு செய்து விட்டால், அது நீங்கள் சென்று சேர வேண்டிய destination போல fix ஆகி விடுகிறது. அடுத்து அதனை நோக்கி நீங்கள் பயணிக்கிறீர்கள். சேர வேண்டிய இடத்துக்கு எப்படியும் போகலாம்.. பேருந்தில், ரயிலில், ஆட்டோவில், அல்லது இவை கலந்த combination-ல், வழியில் சில நேரம் வண்டி break down ஆகும், தாமதமாகும், ஆனாலும் நீங்கள் அந்த இடத்தை சென்று அடைவீர்கள்! அதே போல் உங்கள் இலக்கு முடிவான பின், சில போராட்டங்கள் இருந்தாலும் நீங்கள் அதனை அடைவதும் நிச்சயமாகிறது.

வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது எங்கே போகிறோம் என்பது தெரியும் தானே. அதே போல் தான் வாழ்க்கையில் நீங்கள் எங்கு சென்று அடைய வேண்டும் என்பதும் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment