துணிவே துணை!
காசிக்கு ஒருமுறை பயணம் மேற்கொண்டிருந்தார்
விவேகானந்தர். கோயிலுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது குரங்குக்
கூட்டம் ஒன்று விவேகானந்தரைத் துரத்தியது. தற்காத்துக் கொள்ள அச்சத்தில்
விவேகானந்தர் ஓட ஆரம்பித்தார். குரங்குகள் விவேகானந்தரை விடாமல்
துரத்தியது. என்று குரங்குக் கூட்டத்திட மிருந்து எப்படி தப்பிப்பது என்று
தெரியவில்லை. உடனே மனதில் "பயப்படாதே! எதிர்த்து நில்!' என்று குருதேவரின்
குரல் ஒலித்தது.
விவேகானந்தர் துணிவு வந்தவராய் குரங்குகள் பக்கம்
திரும்பி எதிர்த்து நின்றார். குரங்குகள் ஒரு விநாடி திகைப்போடு நின்றன.
குரங்குகளை இன்னும் தீர்க்கமாகப் பார்த்தார். விவேகானந்தரின் பார்வையில்
பயந்து போன குரங்குகள் மிரண்டு போய் திரும்பி ஓட ஆரம்பித்தன.
""எதையும்
துணிவோடு எதிர்கொண்டால் துக்கமில்லை என்பதை நான் அந்தக்
குரங்குகளிடமிருந்து கற்றுக் கொண்டேன்!'' என்று குறிப்பிட்டுள்ளார்
விவேகானந்தர்.
No comments:
Post a Comment