மஞ்சள்காமாலை என்றாலே... எதையும் சாப்பிடவே பிடிக்காது. காரணம்... பத்தியம் என்ற பெயரில் கொடுக்கப்படும் உணவு வகைகள்தான். ஆனால், காலையில் முள்ளங்கி ஜூஸ், மதியம் நெல்லிக்காய் சாதம், சுவையான ரசம் என்று மஞ்சள்காமாலையை குணமாக்கக்கூடிய சுவையான உணவுகளையும் நீங்கள் தயாரித்துச் சாப்பிடலாம். இதோ அந்த ரெசிபிகள்...
முள்ளங்கி ஜூஸ்
தேவையானவை: நறுக்கிய முள்ளங்கி - ஒரு கப், உப்பு, மிளகுத் தூள் - கால் டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.செய்முறை: எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். இதை வடிகட்டாமல் அருந்தவேண்டும்.
நெல்லிக்காய் சாதம்
தேவையானவை: வடித்த சாதம் - 2 கப், நெல்லிக்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத் தம் பருப்பு - தேவையான அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உளுந்து பொடி (வறுத்து பொடித்தது) - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப் பிலை, உப்பு - சிறிதளவு, செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து நெல்லிக்காய் துருவலைப் போட்டு வதக்கவும். பிறகு... மஞ்சள்தூள், வடித்த சாதம், உளுந்து பொடி ஆகியவற்றைப் போட்டுக் கலக்கி சாப்பிடவும்.
பேரிக்காய் ரசம்
தேவையானவை: பேரிக்காய் - 4, தக்காளி - 2, சின்ன வெங்காயம் - 10, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகு - 2, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, பூண்டு - 2 பல், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காய்களை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு, மிளகை நசுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அதைப் போடவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றையும் அதில் போட்டு தண்ணீர்விட்டு கொதிக்க விடவும். பிறகு, பேரிக்காயை போட்டுக் கொதித்ததும், மஞ்சள்தூள் சேர்த்து இறக்கவும். பேரிக்காயில் நிறைய தண்ணீர் இருப்பதால் மேற்கொண்டு தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.
No comments:
Post a Comment